Published:Updated:

`என் மனைவியோடு எப்படிப் பழகலாம்?' -திருவண்ணாமலை வி.ஏ.ஓ மீது ஆசிட் வீசிய கியூ பிரிவு காவலர்

சிவக்குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையேயான நட்பு நீடித்துக்கொண்டிருந்துள்ளது. இந்த விவகாரம் ஸ்ரீபாலின் கவனத்துக்கும் தெரியவந்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்
கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் உண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீபால். கியூ பிராஞ்ச் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். திருவண்ணாமலை தென்றல் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர், கிளிப்பட்டு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீபாலின் மாமியார் விமலா வெறையூர் வருவாய் ஆய்வாளராக உள்ளார்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது?

இந்த நிலையில், பணியின் காரணமாக சிவக்குமார் விமலாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, ஸ்ரீபாலின் மனைவிக்கும் (விமலாவின் மகள்) சிவக்குமாருக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியுள்ளது. இந்த விஷயம் விமலாவுக்குத் தெரியவர, அவர் இருவரையும் அழைத்துக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிவக்குமாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையேயான நட்பு நீடித்துக்கொண்டிருந்துள்ளது. இந்த விவகாரம் ஸ்ரீபாலின் கவனத்துக்கும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீபாலுக்கும் சிவக்குமாருக்கும் இடையே நேற்று இரவு 11 மணி அளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஸ்ரீபால் தான் கொண்டுவந்திருந்த ஆசிட்டை எடுத்து சிவக்குமார் மீது வீசியுள்ளார். அதை சிவக்குமார் தடுக்க முற்பட்டபோது, ஸ்ரீபால் மீதும் ஆசிட் துளி விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்தனர்.

காவலர் ஸ்ரீபால்
காவலர் ஸ்ரீபால்

தகவலறிந்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரையும் சென்னை கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாகக் கிழக்குக் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.