Published:Updated:

திருவனந்தபுரம்: ஹோட்டலில் ரூம் எடுக்கச் சென்றபோது தகராறு... வெட்டி கொலை செய்யப்பட்ட தமிழக இளைஞர்!

கொலை

அஜீஸ் கடந்த வாரம் சிட்டி டவர் ஹோட்டலில் ரூம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஓட்டல் வரவேற்பாளரான ஐயப்பனுடன் அஜீஸ் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

திருவனந்தபுரம்: ஹோட்டலில் ரூம் எடுக்கச் சென்றபோது தகராறு... வெட்டி கொலை செய்யப்பட்ட தமிழக இளைஞர்!

அஜீஸ் கடந்த வாரம் சிட்டி டவர் ஹோட்டலில் ரூம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஓட்டல் வரவேற்பாளரான ஐயப்பனுடன் அஜீஸ் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Published:Updated:
கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் அமைந்துள்ளது சிட்டி டவர் ஓட்டல். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (34) என்பவர் சிட்டி டவர் ஓட்டலில் வரவேற்பாளராக பணி செய்துவந்தார். ஐயப்பனுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக ஐயப்பன் இந்த ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில் ஓட்டல் வரவேற்பு பகுதியில், தனது இருக்கையில் ஐயப்பன் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் அரிவாளுடன் வந்த ஒருவர் ஐயப்பனை கழுத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஐயப்பன் தனது இருக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். ஐயப்பன் வெட்டி கொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி, ஐயப்பனை கொலை செய்த நெடுமங்காட்டைச் சேர்ந்த அஜீஸ் என்பவரை கைது செய்தனர்.

கொலை நடந்த சிட்டி டவர் ஓட்டல்
கொலை நடந்த சிட்டி டவர் ஓட்டல்

இதுகுறித்து தம்பானூர் போலீஸார் கூறுகையில், "ஐயப்பனை கொலை செய்த வழக்கில் நெடுமங்காடு கல்லியோடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஜீஸ் கடந்த வாரம் சிட்டி டவர் ஹோட்டலில் ரூம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஓட்டல் வரவேற்பாளரான ஐயப்பனுடன் அஜீஸ் தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலை செய்யப்பட்ட ஐயப்பன்.
கொலை செய்யப்பட்ட ஐயப்பன்.

கொலை செய்துவிட்டு ஆயுதத்துடன் நெடுமங்காடு சென்ற அஜீஸ் அங்குள்ள ஒரு பாலத்தில் உட்கார்ந்திருந்தபோது கைது கைதுசெய்யப்பட்டார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அஜீஸ் மீது ஏற்கெனவே சில குற்ற வழக்குகள் உள்ளன. ஐயப்பனை கொலை செய்யும் நோக்கத்துடன் பைக்கில் வந்திருக்கிறார் அஜீஸ். அப்போது ரூம் பாய், குப்பைகளை வெளியே போடுவதற்கு எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் உள்ளே புகுந்த அஜீஸ் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். கைது செய்யப்பட்ட அஜீஸிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது" என்றனர்.

கேரள தலைநகரில் பரபரப்பான காலை வேளையில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism