Published:Updated:

பெரம்பலூர்: ஆலைக்கு எதிரான போராட்டம்; ரெளடிகள் மீதான பிரிவில் வழக்கு - கொதிக்கும் நாடோடியின மக்கள்

ஆலைக்கு எதிராக நாடோடியின மக்கள்

பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த நாடோடியின மக்கள் 14 பேர்மீது 110-ன் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பெரம்பலூர்: ஆலைக்கு எதிரான போராட்டம்; ரெளடிகள் மீதான பிரிவில் வழக்கு - கொதிக்கும் நாடோடியின மக்கள்

பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த நாடோடியின மக்கள் 14 பேர்மீது 110-ன் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
ஆலைக்கு எதிராக நாடோடியின மக்கள்

பெரம்பலூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை விஜய கோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இந்தத் தொழிற்சாலையில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முயற்சி நடப்பதாகவும், இதனால் தங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என அருகே வசிக்கும் மலையப்ப நகரைச் சேர்ந்த நாடோடியின மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
பெரம்பலூர் எஸ்.பி ஆபீஸ்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டயர் தொழிற்சாலையால் தங்களுக்கு ஏற்கெனவே பல்வேறு நோய்கள் ஏற்பட்டுவரும் நிலையில், தற்போது நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்தால் மேலும் பல்வேறு நோய்கள் ஏற்படும். எனவே, பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனுமதி தரக் கூடாது என நாடோடியின மக்கள் கூறியிருந்தனர்.

ஆலைக்கு எதிராக நாடோடியின மக்கள்
ஆலைக்கு எதிராக நாடோடியின மக்கள்

அதனடிப்படையில் கருத்துக்கேட்பு கூட்டம் ஏற்கெனவே இரண்டு முறை நடைபெற்றிருந்தது. பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் அந்தக் கூட்டத்தில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே தனியார் டயர் தொழிற்சாலையைக் கண்டித்து அந்தச் சமூக மக்கள் கடந்த 11-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் செய்த நபர்களில் 14 பேர்மீது பெரம்பலூர் கோட்டாட்சியர் நிறைமதி வழக்கு பதிவுசெய்திருக்கிறார்.

போராட்டத்தில் நாடோடியின மக்கள்
போராட்டத்தில் நாடோடியின மக்கள்

முன்னறிவிப்பின்றி பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும்விதமாக ஆர்ப்பாட்டம் செய்ததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110-ன் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ள கோட்டாட்சியர், அனைவரும் விசாரணைக்கு ஆஜராகும்படியும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு பதிவு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட நாடோடியின மக்கள் சிலரிடம் பேசினோம். ”ஃபேக்டரியிலிருந்து வெளியேறும் புகையால் எங்களது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்கிற ஆதங்கத்தில் அறவழியில் ஆலையின் முன்பு போராட்டம் நடத்தினோம்.

நாடோடியின மக்கள்
நாடோடியின மக்கள்

அதற்கு அந்த அதிகாரிகள் 110-ன் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள். இந்தச் சட்டம் அடிதடி, ரெளடயிசம் செய்யும் முக்கியக் குற்றவாளிகளைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கும் பிரிவு. இதை எப்படி எங்கள்மீது போட்டார்கள் என்பதுதான் எங்களுக்குத் தெரியவில்லை" என்று கொந்தளித்தார்கள்.