Published:Updated:

`என் குழந்தைகள்கிட்ட சொல்வேன்; கலங்கிய கணவர்!'- கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவருக்கு தூக்கு

Representaion Image

தெலங்கானாவில் பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

`என் குழந்தைகள்கிட்ட சொல்வேன்; கலங்கிய கணவர்!'- கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவருக்கு தூக்கு

தெலங்கானாவில் பழங்குடியினப் பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

Published:Updated:
Representaion Image

`என் குழந்தைங்ககிட்ட சொல்லுவேன், உங்க அம்மாவை கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைச்சுடுச்சுன்னு. என்ன ஒண்ணு, அவங்க அம்மா இல்லாதத அவங்களால இன்னும் நம்பமுடியல’ என கண்ணீர் மல்க பேசினார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட பெண்ணின் கணவர்.

தெலங்கானாவின் லிங்காபூர் மண்டல் (Lingapur mandal) பகுதியில் 30 வயதுமதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அந்தப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. கொல்லப்பட்டது பழங்குடியின பெண் என்பதும் அவர் தெருவில் சின்னச் சின்ன பொருள்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. வழக்கமாக மதியமே வீடு திரும்பும் மனைவி இரவு நீண்ட நேரம் திரும்பாததால் அவரின் கணவர் டிசம்பர் 24-ம் தேதி போலீஸில் புகார் அளித்தார்.

Representation image
Representation image

இதையடுத்து, இந்த வழக்கில் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது கண்டெடுக்கப்பட்ட உடல், அவர்தான் என குடும்பத்தினர் உறுதி செய்தனர். பாலியல் வன்கொடுமை உள்ளாகி சித்ரவதை செய்து கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. அவரது மார்புக்கூடு உடைந்திருந்ததைக் கண்டு மருத்துவர்களே அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் நவம்பர் 27-ம் தேதி ஷேக் பாபு, ஷேக் ஷாபுதீன், ஷேக் மக்தூம் ஆகிய மூவரைக் கைது செய்தனர். கைதான மூவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அந்தப்பெண் தனியாக வருவதை அறிந்த மூவரும் அவரை புதர் மறைவில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் உயிரோடு விட்டால் நடந்ததை வெளியில் கூறிவிடுவார் என்ற பயத்தில் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அதீலாபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பிரியதர்ஷினி முன்னிலையில் டிசம்பர் 11-ம் தேதியிலிருந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் தரப்பில் டிசம்பர் 24-ம் தேதி 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜனவரி 30-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்று காலை குற்றவாளிகள் மூவரும் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

Representation image
Representation image

நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். குற்றவாளிகள் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மூவருக்கும் தலா 26,000 அபராதம் விதித்தார். குற்றவாளிகள் மூவரும், `தங்களுக்கு குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களை கவனிக்க யாரும் இல்லை கருணை காட்டுங்கள்' என மன்றாடினர். இந்த விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 45 நாள்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அந்தப்பெண்ணின் கணவர், ``இந்தத் தீர்ப்பு உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. என் குழந்தைகள் தாயை இழந்து தவிக்கின்றனர். இதுபோன்ற நிலைமை வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக் கூடாது. அம்மா இல்லங்கிறத அவங்களால இன்னமும் ஏத்துக்க முடியல. அவங்க அம்மாவ கொலை செய்தவங்களுக்குத் தண்டனை கிடைச்சுடுச்சுன்னு சொல்லுவேன். இது சரியான தீர்ப்பு” என கண்ணீர் மல்க கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism