Published:Updated:

திருச்சி: பாதி எரிந்த நிலையில் உடல்; தடயங்கள் அழிப்பு? - சிறுமி கொலையால் பதற்றம்

முட்புதரில் சிறுமியின் உடல்
முட்புதரில் சிறுமியின் உடல்

பிரேதம் கிடந்த இடத்தில் எரித்தற்கான எந்தத் தடயங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. வேறு எங்கோ எரித்துவிட்டு இங்கே கொண்டு வந்து போட்டிருக்கலாம்.

திருச்சியில் 14 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடயங்களை அழிப்பதற்காகச் சிறுமியை எரித்தார்களா என்று பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது சிறுமியின் வழக்கு.

மாணவி கங்கா தேவி
மாணவி கங்கா தேவி

திருச்சி மாவட்டம், அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்த மாணவி, நேற்று மதியம் 1 மணி வரை வீட்டிலிருந்துள்ளார். இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவியை, நீண்ட நேரமாகக் காணாததால் அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பதற்றமடைந்து தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது ஊருக்கு வெளிப்புற பகுதியில் எரிந்த நிலையில் மாணவியின் சடலம் கிடப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சிறுமியை முட்புதரில் எரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இச்சிறுமியை யார் கொலை செய்தது? ஏன் முட்புதரில் வீசவேண்டும் என்று பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர் போலீஸார்.

முட்புதரில் சிறுமியின் உடல்
முட்புதரில் சிறுமியின் உடல்

இதுதொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க டி.எஸ்.பி கோகிலா தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். அதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவியை எரித்துக்கொலை செய்தார்களா அல்லது வேறு எதுவும் காரணமா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி
மாணவி

திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, `பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான எவ்வித பிரச்னைகளாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் சொல்லுங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன்’ பேட்டிக்கொடுத்த இரண்டு நாள்களிலேயே இச்சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை: `இரவு முழுவதும் எங்களுடனே தேடினான்!’ - கதறிய சிறுமியின் தந்தை

வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். ``சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொன்றார்களா? அல்லது தொழில் போட்டியா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். சிறுமியின் உடல் கருகிக் கிடந்ததைப் பார்த்தால் நேற்று மாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குக்குள்தான் இச்சம்பவம் நடந்திருக்க வேண்டும். சிறுமியின் உடல் முட்புதர் அருகே கிடந்துள்ளது. ஆனால், பிரேதம் கிடந்த இடத்தில் எரித்தற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. வேறு எங்கோ எரித்துவிட்டு இங்கே கொண்டு வந்து போட்டிருக்கலாம். போலீஸாரின் பார்வையைத் திசை திருப்புவதற்காக உடல் அருகில் மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக்
திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக்

முதல்கட்டமாக அப்பகுதியில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கிறோம். முகம் மற்றும் நெஞ்சு பகுதிகள் சரியாக எரியவில்லை ஆனால், இடுப்புக்குக் கீழ்ப் பகுதிகள் மட்டும் முற்றிலும் கருகிய நிலையில் இருக்கிறது. தடயங்களை அழிப்பதற்காக எரித்தார்களா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது. சிறுமியின் தந்தை ஹார்வேர்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இதில், 4 பேர் பார்ட்னராகச் செயல்பட்டு வருகின்றனர். இதில், முன்விரோதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கோணத்திலும் விசாரணை சென்றுகொண்டிருக்கிறது.

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்தால்தான் முழுமையாகத் தெரியவரும்" என்று முடித்துக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நம்மைவிட்டு அகல்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு