Published:Updated:

‘விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா?’ - திருச்சி மாணவி மரண சர்ச்சை!

வித்யா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
வித்யா லட்சுமி

மாணவி வித்யா லட்சுமியும், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள கரணும் ஏற்கெனவே காதலித்துவந்துள்ளனர்.

‘விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா?’ - திருச்சி மாணவி மரண சர்ச்சை!

மாணவி வித்யா லட்சுமியும், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள கரணும் ஏற்கெனவே காதலித்துவந்துள்ளனர்.

Published:Updated:
வித்யா லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
வித்யா லட்சுமி

திருச்சியில், கல்லூரி மாணவி ஒருவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரும், குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி நடந்த போராட்டமும், போலீஸ் நடத்திய தடியடியும் பரபரப்பைக் கிளப்பின. இந்த நிலையில், ‘மாணவியேதான் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை நாடகம் ஆடியிருக்கிறார். அது விபரீதத்தில் முடிந்துவிட்டது’ என்று `பகீர்’ கிளப்புகின்றனர் போலீஸார்.

நொச்சிவயல்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி வித்யா லட்சுமி. வயிற்றுவலி என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மே 22-ம் தேதி இறந்துபோனார். இறக்கும் முன்பு, “என்னை லவ் பண்ணுவதாக டார்ச்சர் செய்த கரணும், அவன் நண்பர்களும் என் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றிக் குடிக்கவைத்துவிட்டனர்” என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் மாணவி.

‘விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா?’ - திருச்சி மாணவி மரண சர்ச்சை!

உயிரிழந்த மாணவியின் தந்தை ஆனந்த் நம்மிடம், “என் பொண்ணு சாவுறதுக்கு முன்னாடி, `மூணு பேர் வாயில விஷத்தை ஊத்திட்டாங்க’ன்னு வாக்குமூலம் கொடுத்திருக்கு. ஆனா, இப்போ வரைக்கும் ஒருத்தரை மட்டும்தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. யாரைக் காப்பாத்துறதுக்காக போலீஸ் இப்படிச் செய்யுதுன்னு தெரியலை. நியாயம் கேட்டு போராடுன எங்களை அடக்க எதுக்காக அவ்வளவு போலீஸைக் குவிக்கணும்... எதுக்காக எங்க மேல தடியடி நடத்தணும்?” எனக் கலங்கினார்.

போலீஸாரோ, “மாணவி வித்யா லட்சுமியும், தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள கரணும் ஏற்கெனவே காதலித்துவந்துள்ளனர். இது இரு வீட்டாருக்குமே தெரிந்திருக்கிறது. மாணவியின் செயல்பாடு குறித்து கரண் ஏதோ கண்டித்துப் பேசியிருக்கிறார். கரணை மிரட்டுவதற்காக, எலி பேஸ்ட்டைத் தின்று தற்கொலை நாடகம் ஆடியிருக்கிறார் மாணவி. மற்றபடி வற்புறுத்தி யாரும் விஷம் கொடுக்கவில்லை. அது உண்மையென்றால், மூன்று பேர் வலுக்கட்டாயமாக கூல்டிரிங்ஸில் விஷம் கலந்து கொடுத்துவிட்டனர் என்ற விஷயத்தை, மாணவி ஏன் முன்னரே குடும்பத்தினரிடமோ, போலீஸாரிடமோ சொல்லவில்லை... ‘எலி பேஸ்ட் சாப்பிட்டால் என்னென்ன பாதிப்புகள் வரும், எப்படிச் சிகிச்சை பெறுவது’ என வித்யா லட்சுமியே இன்டர்நெட்டில் தேடிய ஆதாரமும் சிக்கியிருக்கிறது. மருத்துவர்களிடமும் ‘எலி மருந்து சாப்பிட்டதுக்கு ட்ரீட்மென்ட் கொடுங்க’ என்றிருக்கிறார்” என்று போட்டுடைக்கின்றனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், “கூல்டிரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்ததாகச் சொல்லப்படும் சம்பவத்தன்று அந்த லொகேஷன்ல கரண் செல்போன் சிக்னல் மட்டும்தான் காட்டுது. அப்படியிருக்க மற்ற ரெண்டு பேரை இந்த வழக்குல எப்படிச் சேர்க்க முடியும்... கரண் தவிர, இன்னொரு பையனையும் அந்தப் பொண்ணு லவ் பண்ணியிருக்காங்க. அதனால ரெண்டு பேருக்கும் இடையில் நடந்த சண்டையிலதான் அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சுருக்கு. எனவே, தற்கொலைக்குத் தூண்டியதாக கரண் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.

மாணவி அகால மரணமடைந்திருக்கிறார். காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டியது காவல்துறையின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism