Published:Updated:

`நம்மை பாத்துக்க பிள்ளைகள் இல்லை; வாழ்ந்து என்ன பயன்?’-வேதனையில் விபரீத முடிவெடுத்த திருச்சி தம்பதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருச்சி மலைக்கோட்டை - தற்கொலை
திருச்சி மலைக்கோட்டை - தற்கொலை

`குழந்தைகளைத் தத்தெடுக்கவும் முயன்றார்கள். ஆனால் ஏன் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை. அவர்கள் இறப்புக்கு முக்கியக் காரணமே குழந்தைகள் இல்லை என்பதுதான்” என்கிறார்கள் உறவினர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`வருமானமும் சரியாக இல்லை. உடல்நிலை தளர்ந்த நேரத்தில் நம்மைப் பாதுகாக்க நமக்குப் பிள்ளைகளும் இல்லை. இனி நாம் வாழ்ந்து என்ன பயன்?' என்று குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதியர் தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி
திருச்சி

திருச்சி, தென்னூர் பஜாரில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் நடராஜன் (55), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி மகாலட்சுமி (50). இவர்களுக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதற்காக மருத்துவமனையில் முறையான சிகிச்சை பெற்றும் குழந்தைப்பேறு இல்லை. இதனால் இருவரும் பெரும் சோகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கூலி வேலை செய்வதால் பெரிதாகக் கையில் பணம் இல்லாமல் சிரமப்பட்டிருக்கிறார்கள். அதோடு மகாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும், பணம் கொடுத்து மருத்துவம் பார்ப்பதிலும் இருவருமே மனம் நொந்துபோயிருக்கிறார்கள்.

இந்தநிலையில், முதுமைக் காலத்தில் தங்களைக் கவனிக்க பிள்ளைகள் இல்லையே என்கிற கவலை அவர்களுக்கு இருந்ததாகச் சொல்கிறார்கள். இதனால், இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்து, பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தனர். தங்களை யாரும் காப்பாற்றிவிடக் கூடாது என்பதால், அதிகாலை நேரம் பார்த்து தம்பதியர் தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டனர்.

திருச்சி
திருச்சி

இதில் வீட்டிலுள்ள டி.வி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. தம்பதியரின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியாததால் கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர்.

தீ
தீ
Representational Image

தகவல் அறிந்து வந்த போலீஸார் படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த தம்பதியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், 80 விழுக்காடு தீக்காயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமைக் காவலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! காவலர்கள் அதிர்ச்சி!

தற்கொலை செய்துகொள்வதற்கு என்ன காரணம் என்று அவர்களின் உறவினர்களிடம் விசாரித்தோம். ``நடராஜன் தினக்கூலி வேலை செய்துவருகிறார். கிடைக்கிற வேலையைச் செய்து குடும்பம் நடத்திவந்தார். மகாலட்சுமிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதால், மருத்துவமனைக்குச் சென்று வருவதிலேயே பாதி மனம் உடைந்துவிட்டார்கள். நிலையான வருமானமும் இல்லை. மறுபுறம் உடல்நிலை தளர்ந்த நேரத்தில் நம்மைப் பாதுகாக்க நமக்குப் பிள்ளைகளும் இல்லையே என்கிற ஏக்கம். குழந்தைகள் இல்லாத ஏக்கத்தை எங்களிடம் பலமுறை கொட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி அரசு மருத்துவமனை

இந்தநிலையில், குழந்தைகளைத் தத்தெடுக்கவும் முயன்றார்கள். ஆனால் ஏன் அதைச் செய்யவில்லை என்று தெரியவில்லை. அவர்கள் இறப்புக்கு முக்கியக் காரணமே குழந்தைகள் இல்லை என்பதுதான். குழந்தைகள் இல்லாத உலகத்தில் இனி நாம் வாழ்ந்து என்ன பயன் என்று தற்கொலை முடிவை எடுத்துவிட்டனர்" என தழுதழுத்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு