Published:Updated:

திருச்சி:`உங்க போனுக்கு ஓடிபி வந்திருக்கா சார்... அதை உடனே சொல்லுங்க’-பணத்தைப் பறிகொடுத்த ஐடி ஊழியர்

ஆன்லைன் ஆப்
ஆன்லைன் ஆப்

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு தீமைகளும் இருக்கின்றன. நாம்தான் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`உங்க நம்பருக்கு ஒரு ஓ.டி.பி வந்திருக்கா சார்... உடனே டைம் அவுட் ஆவுறதுக்குள்ள அந்த நம்பரைக் கொஞ்சம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்துல உங்க பிரச்னையைச் சரிபண்ணுகிறோம்’ என்று சொல்லி ஐடி கம்பேனியில் வேலை பார்ப்பவரிடம் நூதனமான முறையில் மோசடி செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி
திருச்சி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரைச் சேர்ந்தவர் மோகன். இவர் பெங்களூரிலுள்ள ஓர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இந்தநிலையில், இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த ஒரு வருடமாக வீட்டிலிருந்து வேலை பார்த்துவருகிறார். கடந்த வாரம் இவரது ஸ்மார்ட்போனிலுள்ள ’போன் பே’ ஆப் மூலமாக அவரது சேலரி அக்கவுன்ட்டிலிருந்து அவரது பர்சனல் அக்கவுன்ட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதில் எரர் என வந்ததால். ’போன் பே’ செயலியின் ஹெல்ப் பகுதிக்குச் சென்று மோகன் புகார் அளித்திருக்கிறார். அதன்பேரில் மோகன் செல்போன் எண்ணுக்கு கஸ்டமர் கேர் பிரிவிலிருந்து ஒர் போன் வந்திருக்கிறது.

அதில் பேசிய நபர், `என்ன பிரச்னை சார்? போன் பே ஆப் அதிகாரிகள் பேசுகிறோம்’ என்று சொல்ல, இவர் நடந்தவற்றையெல்லாம் சொல்லியிருக்கிறார். பின்பு அவர்கள், `சார் உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி நம்பர் வந்திருக்கா சார்... உடனே டைம் அவுட் ஆவுறதுக்குள்ள அந்த நம்பரைக் கொஞ்சம் சொல்லுங்க. அஞ்சு நிமிஷத்துல உங்க பிரச்னையைச் சரிபண்ணுகிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆப்
ஆப்

அந்த ஓடிபி எண்ணை மோகன் கொடுத்துள்ளார். அவர் பேசிவிட்டு போனை வைத்த கையோடு அவரது அக்கவுன்ட்டிலிருந்து 9,945 ரூபாய் பணம் எடுத்ததற்கான எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. இதில் அதிர்ச்சியடைந்த மோகன் மீண்டும் கஸ்டமர் கேர் டிப்பார்ட்மென்ட்டை தொடர்புகொண்டிருக்கிறார். அவர்கள் சரியான பதிலைக் கொடுக்காததால், இது தொடர்பாக திருச்சி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையில் போலீஸார், போன் பே ஆப் கஸ்டமர் கேர் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிது செய்து விசாரித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

15 வருடங்களுக்கு முன்பே மோசடி மன்னர்களாக வலம்வந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்; பெற்றோர் கைது!-நடந்தது என்ன?

இது குறித்து சைபர் கிரைம் அதிகாரிகளிடம் பேசினோம். ”மோகன் என்பவரிடம் ’போன் பே’ ஆப் கஸ்டமர் கேர் அதிகாரி பேசுவதாக ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது அந்த நபர், ‘போன் பே'யின் ஹெல்ப் பகுதிக்குச் செல்லுங்கள் என்றும் `உங்களது அக்கவுன்ட் டீடெய்ல்ஸை அதில் பதிவு செய்யுங்கள்’ என்று கூறியதன்பேரில், மோகன் அவர்கள் சொன்ன அனைத்து விவரங்களையும் பதிவுசெய்திருக்கிறார்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

அடுத்தாக அவருக்கு வந்த ஓ.டி.பி எண்ணையும் கேட்டிருக்கிறார்கள். அதையும் சொல்லியிருக்கிறார். அப்பறம் என்ன நடக்கும் நீங்களே யோசித்துப்பாருங்கள். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் யாராக இருந்தாலும் ஒடி நம்பரையோ, ஏ.டி.எம் கார்டு நம்பரையோ, சி.வி.வி நம்பரையோ எதைக் கேட்டாலும் யாரும் பகிர வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் செய்தால் என்ன அர்த்தம்... படிக்காதவர்கள்தான் இப்படிச் செய்கிறார்கலென்றால், இவர் படித்தவர், இவருக்குக் கூடவா தெரியாது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தீமைகளும் இருக்கின்றன. நாம்தான் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்” என்று முடித்துக்கொண்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு