Published:Updated:

கதறவிடும் கன்னக்கோல் கொள்ளையர்கள்! - நடுங்கும் நகைக்கடைகள்...

கொள்ளையர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளையர்கள்

என்ன செய்கிறது ‘ஸ்காட்லாந்து’ போலீஸ்?

கதறவிடும் கன்னக்கோல் கொள்ளையர்கள்! - நடுங்கும் நகைக்கடைகள்...

என்ன செய்கிறது ‘ஸ்காட்லாந்து’ போலீஸ்?

Published:Updated:
கொள்ளையர்கள்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளையர்கள்

க்டோபர் 2-ம் தேதி... காலை 8 மணி. திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் பகுதியில் இருக்கும் லலிதா ஜுவல்லரியை வழக்கம்போல் திறக்கின்றனர் அதன் ஊழியர்கள். உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் கீழ்த்தளத்தில் டிஸ்ப்ளேவில் வைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் ஒன்றுகூட இல்லை. பதறியடித்தபடி கடையெங்கும் தேடுகிறார்கள். மேற்குப் பக்கச் சுவரின் கீழே ஓர் ஆள் நுழையும் அளவுக்கு துளை. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அத்தனை நகைகளையும் வாரிச்சுருட்டிச் சென்றுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனம், மாவட்ட எஸ்.பி-யான ஜியாஉல் ஹக் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடனடியாக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையர்கள் மிளகாய்ப்பொடியைத் தூவி சென்றிருந்ததால், மோப்பநாயால் கண்டுபிடிக்க இயலவில்லை. சி.சி.டிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் கையுறை மற்றும் மிக்கிமவுஸ் முகமூடி அணிந்திருப்பது தெரியவந்தது.

விசாரணையின்போது...
விசாரணையின்போது...

கொள்ளையர்கள், நகைக்கடையின் அருகில் உள்ள புனித வளனார் கல்லூரியின் மைதானம் வழியாக நுழைந்துள்ளனர். கடைக்குள் நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை இருந்து நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். மொத்தம் 28 கிலோ தங்கம், 1.15 கிலோ வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளைபோயுள்ளன. லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், ‘‘13 கோடி ரூபாய் மதிப்புள்ள 800 நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்’’ என்கிறார். நகைக்கடையில் பணியாற்றும் 160 பணியாளர் களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கதறவிடும் கன்னக்கோல் கொள்ளையர்கள்! - நடுங்கும் நகைக்கடைகள்...

கொள்ளையர்களின் நடை உடை பாவனை களைவைத்து, அவர்கள் வட மாநிலத்தவர்கள் என்று போலீஸார் உறுதி செய்துள்ளனர். கொள்ளையர்கள் பக்கத்து மாவட்டங்களில் முகாமிட்டிருக்கலாம் எனச் சந்தேகமடைந்து விசாரணை மேற்கொள்ளப் பட்டது. செல்போன் சிக்னலை வைத்து புதுக்கோட்டை பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் போலீஸார் விசாரணைக்குச் சென்றனர். அப்போது கையில் சாப்பாடு பார்சலுடன் வந்த அப்ஜுன் ஷேக் என்கிற ஜார்கண்ட் மாநில இளைஞர், போலீஸாரைப் பார்த்ததும், மாடியில் இருந்து எகிறி கீழே குதித்துத் தப்ப முயன்றுள்ளார். கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை புதுக்கோட்டை ஜி.ஹெச்-சில் அனுமதித்த போலீஸார், அவருடன் தங்கி இருந்த ஐந்து நபர்களைக் கைதுசெய்து திருச்சிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் திருச்சியில் நடந்துள்ள மூன்றாவது மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் இது. கடந்த 2011-ம் ஆண்டு, திருச்சி மலைக்கோட்டை வாசல் எதிரில் செயல்படும் அமர் ஜுவல்லரியில் 40 கிலோ தங்கம் கொள்ளைபோனது. அதில் சம்பந்தப்பட்டவர்களும் வடமாநிலக் கொள்ளையர்கள்தான்.

கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி... திருச்சி, சமயபுரம் பிச்சாண்டார் கோயில் பகுதியில் இயங்கிவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்பக்கச் சுவரில் துளையிட்டு, வெல்டிங் இயந்திரம்மூலம் லாக்கரை உடைத்து 500 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

சுவரில் துளையிட்டு, நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடிப்பது ஒன்றும் தமிழகத்துக்குப் புதிதல்ல... கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில்  ஜானகி ஜுவல்லர்ஸில் 4.3 கிலோ தங்க நகை மற்றும் 1.26 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் முன்புறம் தண்ணீர் லாரி நின்றுகொண்டிருந்த நிலையில், கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி திருவிடைமருதூரில் உள்ள ‘நியூ மதினா ஜுவல்லரி’யின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு 20 பவுன் தங்க நகை கொள்ளை யடிக்கப்பட்டது. கடைக்குள் இருந்த பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முடியாததால், 100 பவுன் தங்க நகைகள் தப்பின.

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி... திருவண்ணாமலை அடுத்த செங்கம் சாலை பெரிய கோளாப்பாடி கிராமத்தில் ‘தீபம் திருப்பதி’ என்ற அடகுக்கடை சுவரில் துளையிட்டு 2.5 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பாதுகாப்புப் பெட்டகத்தை உடைக்க முடியாததால், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் தப்பின.

கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி... நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் மெயின்ரோட்டில் ‘திருப்பதி ஃபைனான்ஸ்’ என்ற நகைக்கடை மற்றும் அடகுக்கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 320 கிராம் தங்கம், 17 கிலோ வெள்ளி மற்றும் 2.11 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித் துள்ளனர்.

இதுவரையில் இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதுவரையிலும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். கொள்ளையர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அவர்களின் அதிகபட்ச கண்டு பிடிப்பாக இருக்கிறது. ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானவர்கள் தமிழ்நாடு போலீஸார் என்று சொல்வார்கள். அதையே இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?