Published:Updated:

திருச்சி: சாக்லேட் காதல்... போக்சோ வழக்கு! - போலீஸாரைக் குழப்பிய சிறுமியின் வாக்குமூலம்

யுவராஜ்
யுவராஜ்

காவல்துறையினரின் சந்தேகம் சிறுமி மீது திரும்பியது. அந்தச் சிறுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் கூறிய அனைத்தும் பொய் என்றார்...

திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்தச் சிறுமியின் தாயார் சிறுமியைத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். சிறுமியைச் சோதனை செய்த மருத்துவர்கள் அந்தச் சிறுமி மூன்று மாத கர்ப்பமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

யுவராஜை அழைத்துச் செல்லும் காவலர்கள்
யுவராஜை அழைத்துச் செல்லும் காவலர்கள்

மேலும் இது குறித்து திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவலளித்தனர். தகவலின் பேரில் மருத்துவமனைக்குச் சென்ற காவல்துறையினர் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் ரம்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அப்பா இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்தநிலையில் அருகிலுள்ள லிட்டில் ஃப்ளவர் மேனிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது படிப்பை மேலே தொடராமல் வீட்டில் இருந்துவந்திருக்கிறார்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

கடந்த 2018 -ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கோகுல கண்ணன் என்ற சகமாணவனுடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் அது தீவிரக் காதலாக மாறியதாகவும், கோகுல கண்ணன் கடந்த அக்டோபர் மாதம் 2 -ம் தேதி தனக்கு 100 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி எல்லை மீறியதாகவும், அதனால் தான் கர்ப்பமாக இருப்பதாக சிறுமி விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து கோகுல கண்ணன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 450 மற்றும் போக்சோ சட்டம் 2012-ன் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை காவல்துறையினர் வலைவீசித் தேடிவந்தனர். கோகுல கண்ணன் பேசிய எண்களைத் தொடர்பு கொண்டபோது அவையனைத்தும் பயன்பாட்டில் இல்லை எனத் தெரியவந்தது. இதனால், ஆவணங்கள் கிடைக்காமல் திணறிய காவல்துறையினர் சிறுமியும், கோகுல கண்ணனும் படித்ததாகக் கூறப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆவணங்களைச் சோதனை செய்ததில், கோகுல கண்ணன் என்ற பெயரில் யாரும் படிக்கவில்லை என்பது உறுதியானது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இதனால் காவல்துறையினரின் சந்தேகம் சிறுமி மீது திரும்பியது. அந்தச் சிறுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் கூறிய அனைத்தும் பொய் என்றும், தனது இந்தநிலைக்குக் காரணம் தன்னுடன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்ட யுவராஜ்தான் என்றும் காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.

யுவராஜை அழைத்துச் செல்லும் காவலர்கள்
யுவராஜை அழைத்துச் செல்லும் காவலர்கள்

மேலும் சிறுமி சொன்ன தகவல் காவல்துறையினரைக் கிறுகிறுக்கவைத்தது. 8 -ம் வகுப்பு படிக்கும்போதே யுவராஜ் தன்னிடம் அவனது காதலைத் தெரிவித்ததாகவும், ஆயினும் தான் அதை நிராகரித்ததாகவும் தெரிவித்த சிறுமி, யுவராஜ் தனக்கு அடிக்கடி 100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்ததால் அவனது காதலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, காதலன் யுவராஜை காவல்துறையினர் கைது ய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு