Published:Updated:

திருச்சி: ராஜஸ்தானிலிருந்து தமிழகம்; அபின் கடத்தலில் சிக்கிய பா.ஜ.க நிர்வாகி! அதிர்ச்சிப் பின்னணி

அபின் போதைப் பொருள் கடத்தியவர்கள்
அபின் போதைப் பொருள் கடத்தியவர்கள்

`அந்த காரில் `அபின்’ என்ற போதைப் பொருள் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க பிரமுகர் உட்பட ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.’

பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ், `அபின்’ என்ற போதைப் பொருளைக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக, தமிழக பா.ஜ.க-வில் குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கட்சியில் அடைக்கலம் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தநிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பா.ஜ.க நிர்வாகி கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது.

அபின் போதைப்பொருளை கடத்தியவர்கள்
அபின் போதைப்பொருளை கடத்தியவர்கள்

கொரோனா ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்தி, திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாகக் குற்றத் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக மறைமுகமாக போலீஸார் விசாரித்துவந்தனர். திருச்சி மாவட்டம் முழுவதும் டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி: `ரூ.20 லட்சம் மதிப்பிலான  அபின் கடத்தல்; 6 பேர் கைது!’ - சிக்கிய மருத்துவர்

மன்னார்புரம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியில் வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் `அபின்’ என்ற போதைப் பொருள் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்திலிருந்த அபினை போலீஸார் கைப்பற்றி, இரண்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அடைக்கலராஜ்
அடைக்கலராஜ்

இதில் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சரவணன், ஜெயப்பிரகாஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், பெரம்பலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மோகன்பாபு, பா.ஜ.க பிரமுகர் மெக்கானிக் அடைக்கலம் உட்பட நான்கு பேரையும் நேற்று இரவு பிடித்து, திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர் போலீஸார்.

போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள்
போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள்

காரில் கடத்தப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் 15 லட்சம் ரூபாய் என்றும், இது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

யார் இந்த அடைக்கலராஜ்?

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏ.சி மெக்கானிக்காக இருந்தவர், பின்பு பெரம்பலூர் பா.ஜ.க-வில் முன்னாள் மாவட்ட துணைத் தலைவராகவும் பதவிவகித்தவர். தற்போது அக்கட்சியின் ஓ.பி.சி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவரிடமும், இவரின் நண்பர்களிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு காரிலும் போதைப் பொருள் கடத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணனுடன் அடைக்கலராஜ்
பொன்.ராதாகிருஷ்ணனுடன் அடைக்கலராஜ்

அவர்கள் கொடுத்த தகவலின்படி, அந்த காரையும் அதிலிருந்த மேலும் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப் பொருள் கடத்தப்பட்ட இரு கார்களும் மருத்துவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இந்த வகையான போதைப் பொருள் இங்கு எப்படி வந்தது; இங்கு இதையாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு