Published:Updated:

திருச்சி: மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்! - சோதனையில் சிக்கிய `டிக்டாக்’ சூர்யா உட்பட 10 பேர்

`டிக்டாக்’ சூர்யா
News
`டிக்டாக்’ சூர்யா

`டிக்டாக்’ புகழ் ரௌடி பேபி சூர்யா உட்பட 10 பேர் மசாஜ் சென்டர் விபசாரத்தில் ஈடுபட்டதாக திருச்சி போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்களை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் வந்ததால், போலீஸார் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

திருச்சியில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. `பாடி மசாஜ்' (ஸ்பா) என்கிற பெயரில் வீட்டுக்கே சென்று பாலியல் தொழில் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் முதியவர்களைக் குறிவைத்து இந்த டீம் பணத்தைக் கறப்பதாக போலீஸாருக்குப் புகார் சென்றது.

`டிக்டாக்’ சூர்யா
`டிக்டாக்’ சூர்யா

திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி, போலியாக மசாஜ் சென்டர் நடத்திவரும் குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். பெண் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் தனிப்படை டீமுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் உறையூர், அண்ணாமலை நகர், தில்லை நகர், டி.வி.எஸ் டோல்கேட், ஜி கார்னர் ஆகிய இடங்களில் தனிப்படை டீம் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`ஸ்பா மையம்’ என்ற போலியான பெயரில் கட்டடங்களை வாடகைக்கு எடுத்து ஏழ்மையிலுள்ள பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில்` டிக்டாக்’ புகழ் ரௌடி பேபி சூர்யா என அழைக்கப்படும் திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மனைவி சூர்யா என்கிற சுப்புலட்சுமியும் கைதுசெய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த அவரது உறவினர் தினேஷும் கைதுசெய்யப்பட்டார்.

புரோக்கர் தினேஷ்
புரோக்கர் தினேஷ்
திருச்சி கமிஷனர் லோகநாதன்
திருச்சி கமிஷனர் லோகநாதன்

இது தொடர்பாக உறையூர், கே.கே நகர், தில்லை நகர் போலீஸாரும், விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸாரும் வழக்குகள் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் சூர்யா என்கிற சுப்புலட்சுமி, புரோக்கர் தினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைதுசெய்தனர். இதில், பாதிக்கப்பட்ட 12 பெண்கள் மீட்கப்பட்டு அரசுப் பெண்கள் பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் கார்த்தி, ``திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரிச் சீட்டு விற்பனை, ஸ்பா தொழில் என்கிற பெயரில் பாலியல் தொழில் எனச் சட்டவிரோதச் செயல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. இவற்றைத் தடுக்க வேண்டும் என்று பலமுறை போலீஸாரிடம் புகார் கொடுத்தோம். அவர்கள் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், இந்தத் தொழில்களின் பின்புலத்தில் காவல்துறையைச் சேர்ந்த சிலரும், அவர்களது வாரிசுகளும் இருக்கிறார்கள்.

அத்தோடு இந்தத் தொழிலை நடத்தும் உரிமையாளர்கள், போலீஸாரை சிறப்பாக கவனிப்பதால் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவந்தனர். இந்தநிலையில், லோகநாதன் ஆணையராகப் பதவி ஏற்ற பின்பு, இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைப்பதோடு இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகிறார். இவரது செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை" என்றார்.

இது குறித்து கமிஷ்னர் லோகநாதனிடம் பேசினோம்.``ஸ்பா சென்டர்களைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டிருந்தோம். ஐந்து இடங்களில் பாலியல் தொழில் நடப்பதாகத் தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸார் அதிரடியாக ஆய்வு செய்து பலரைக் கைதுசெய்திருக்கிறார்கள். ஸ்பா சென்டரை நடத்தும் உரிமையாளர்களோடு சூர்யா என்ற பெண்ணும் இணைந்து, இந்த ஸ்பா தொழிலை நடத்திவந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அவரையும் கைதுசெய்து, அரசுக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். சட்டத்துக்குப் புறம்பான, இது போன்ற `ஸ்பா’ என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி விபசாரத்தில் ஈடுபடுத்திவருவது கண்டறியப்பட்டதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.