Published:Updated:

முட்டைகோஸ் மூட்டைகளில் 1000 கிலோ குட்கா; வாகன சோதனையில் கண்டுபிடித்த திருச்சி போலீஸ்

திருச்சியைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் குட்காவின் கூடாரமே 'ராம்ஜிநகர்'தான். இங்கிருந்துதான், திருச்சியில் பல பகுதிகளுக்குப் பிரித்து அனுப்புகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முட்டைகோஸ் ஏற்றிவந்த லோடு ஆட்டோவில் 1000 கிலோ அளவிலான குட்காவை போலீஸார் பிடித்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.என்ன நடந்தது? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று போலீஸார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.

திருச்சி: 550 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல்; குடோன் உரிமையாளர் கைது!
குட்கா
குட்கா

திருச்சி சஞ்சீவி நகர்ப் பகுதியில் ரோந்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மைசூரிலிருந்து முட்டைகோஸ் ஏற்றி வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி போலீஸார் சோதனை செய்துள்ளார். அப்போது அந்த லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரை விசாரித்த போலீஸார் வண்டியில் ஏறி பரிசோதனை செய்திருக்கிறார்கள். அந்த வாகனத்தில் கிலோ கணக்கில் மூட்டை மூட்டையாக குட்கா, புகையிலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த வாகனம் கோட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த வாகனத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரம் கிலோவிற்கு அதிகமான குட்கா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த போதைப்பொருட்கள் யாருக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.

காய்கறி ஏற்றிவந்த லோடு ஆட்டோ
காய்கறி ஏற்றிவந்த லோடு ஆட்டோ

திருச்சியில் எங்கெங்கெல்லாம் சப்ளை ஆகிறது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரம் கிலோ அளவிலான குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளதை அறிந்த போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கோட்டை காவல் நிலையம் வந்து நேரில் பார்வையிட்டதோடு விசாரணை குறித்துக் கேட்டறிந்தார். மேலும், போதைப் பொருள் புழக்கத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இதில் யாரும் தப்பிக்கக்கூடாது என காவல்துறையினரின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போதை வஸ்துக்கள் திருச்சிக்குள் எப்படி வருகிறது? போலீஸார் வட்டாரத்தில் பேசினோம்.” 'குட்கா', 'கஞ்சா' உள்ளிட்ட போதைப் பொருட்களைக் கர்நாடகாவிலிருந்து கம்பம், தேனி வழியாக ஈரோட்டிற்குக் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது.

போலீஸார்
போலீஸார்

திருச்சியைப் பொறுத்தவரையில் கஞ்சா மற்றும் குட்காவின் கூடாரமே 'ராம்ஜிநகர்'தான். இங்கிருந்துதான், திருச்சியில் பல பகுதிகளுக்குப் பிரித்து அனுப்புகிறார்கள். பெரிய கம்மாலத்தெரு, சங்கிலியாண்ட புரம், பாலக்கரை, பாபு ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மார்வாடி சேட்டுகள் மூலமாகப் பலபகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது. பெரிய வியாபாரிகளான இவர்கள் மூலமாகச் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

குட்கா
குட்கா

அதுவும் லோடு ஆட்டோவில் மெடிக்கல் எமர்ஜென்சி, காய்கறி வாகனம், மூலமாகக் கொண்டுவரப்பட்டு டூவிலர் மூலமாக டோர்டெலிவிரி செய்யப்படுகிறது. இப்படிதான் மைசூரிலிருந்து காய்கறி ஏற்றிவந்த லோடு ஆட்டோவை மடக்கிப் பிடித்துப் பார்த்தபோது அப்போது அந்த லோடு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரின் செயல்பாடுகள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்த போலீஸார் வண்டியில் ஏறி பரிசோதனை செய்திருக்கிறார்கள்.ஆயிரம் கிலோ அளவிற்கு 'ஹான்ஸ்', 'சாந்திபாக்கு', 'கூல்லீப்' உள்ளிட்ட பல போதை வஸ்துக்களைப் பிடிப்பட்டது" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு