Published:Updated:

திருச்சி:`கடன் வாங்கி ஆன்லைன் கேம்; பறிபோன பணம்!' - மன உளைச்சலால் காவலர் தற்கொலை

கடன் சுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட காவலர்
கடன் சுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட காவலர்

ஆனந்த் ஆன்லைனில் பணம் கட்டி ரம்மி விளையாடுவான் என்று அவர் நண்பர்கள் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆன்லைன் ரம்மி விளையாடியதால் லட்சக்கணக்கில் கடன் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மியால் அவரது வாழ்க்கையே அழியும் என்று துளியும் நினைக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் அழும் காட்சி பார்ப்போரைக் கலங்க வைத்துள்ளது.

ஆனந்த் போலீஸார்
ஆனந்த் போலீஸார்

திருச்சி மாவட்டம், திருப்பாய்துறை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ஆனந்த் ஆன்லைனில் ரம்மி சீட்டு விளையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்காக தன்னுடன் வேலை பார்க்கும் சக போலீஸார் மற்றும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வழங்குவது வழக்கம்.

அவ்வாறு வாங்கிய கடனை திரும்பிக் கொடுக்க முடியாமல் மன உளைச்சலிலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றவர், இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தன் அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

காவலர்
காவலர்

இன்று அதிகாலை 3 மணிக்கு மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற கோவிந்தராஜ் தன் மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்துவிட்டு காவல்நிலையத்திற்குத் தகவல் கூறியுள்ளார். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று ஆனந்த் உறவினர்களிடம் பேசினோம். ``ஆனந்த எந்த வித வம்பு தும்புக்கும் போகாதவன். நல்ல பையன். இந்நிலையில் நேற்று வேலைய முடிச்சிட்டு நல்லபடியாதான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு அவர்கள் அம்மா, அப்பாவிடம் பேசிவிட்டுத்தான் போய் படுத்தான். அதிகாலையில் அவர்களுடைய அம்மாவோட புடவையில் தூக்கு மாட்டி சாவுவான்னு தெரியாமல் போச்சுன்னு” தழுதழுத்தார்.

தற்கொலை செய்துக்கொண்ட போலீஸார்
தற்கொலை செய்துக்கொண்ட போலீஸார்

ஆனந்த் ஆன்லைனில் பணம் கட்டி ரம்மி விளையாடுவான் என்று அவர் நண்பர்கள் சொல்கிறார்கள். அதிலும், சக நண்பர்கள் மற்றும் போலீஸாரிடம் கடன் வாங்கி விளையாடியிருப்பதாக சொல்றாங்க. கடன் அதிகமானதால் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள். இவ்வழக்கை போலீஸார் விசாரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை: `என்னோட ராட்சஷிக்கு தகவல் சொல்லிடுங்க!' - ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தற்கொலை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு