Published:Updated:

திருச்சி: ஜாமீனில் வந்த அண்ணன்; பைக்கில் மோதிய கார்! - பதறவைத்த பழிக்குப் பழி கொலை

கொலை
கொலை ( மாதிரிப் படம் )

காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். கீழே விழுந்த புகழேந்தியும் சதீஸும் தப்பியோடினர். அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது அந்தக் கும்பல்.

திருச்சியில் முன்விரோதத்தில் தனியார் வங்கி ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பழிக்குப் பழி தீர்க்க நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸார்.

திருச்சி
திருச்சி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பாளையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வண்ணமணி. இவருக்கு கோவேந்திரன், புகழேந்தி என இரண்டு மகன்கள், ஒரு மகள். இதில் புகழேந்தி திருச்சி தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரங்கராஜ். திருச்சியில் ரயில்வே போலீஸாகப் பணியாற்றினார். இவர்கள் இருவருக்கும் வீட்டின் அருகேயுள்ள இடம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த வருடம் இதே நாளில் இரு வீட்டாருக்கும் நடந்த தகராற்றில் கோவேந்திரன் கத்தியால் குத்தியதில், ரங்கராஜ் உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கில் கோவேந்திரன், அவரின் தந்தை வண்ணமணி இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவரும் ஜாமீனில் வந்துள்ளனர்.

Corona Live Updates: சென்னையில் குறையும் பாதிப்பு - தமிழகத்தில் புதிதாக 4,526 பேருக்குத் தொற்று!

ஜாமீனில் வந்த வண்ணமணி குடும்பத்தினர் மண்ணச்சநல்லூர் அருகே பாச்சூருக்கு கிராமத்திற்குக் குடிபெயர்ந்து செல்ல நேற்றிரவு அவர்களது அனைத்து பொருள்களையும் ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு மண்ணச்சநல்லூர் போலீஸார் பாதுகாப்புடன் பாளையநல்லூர் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துச் சென்றனர். பின்னர், தம்பி புகழேந்தி தன் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பாச்சூரை நோக்கிச் சென்றபோது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். கீழே விழுந்த புகழேந்தியும் சதீஸும் தப்பியோடினர். அவர்களை விரட்டிச் சென்ற கும்பல், புகழேந்தியைச் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலே புகழேந்தி உயிரிழந்தார். தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஸுக்கு தலையில் அரிவாள் வெட்டு விழுந்ததால் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருச்சி் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி
திருச்சி

சம்பவ இடத்திற்குத் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு ) சீனிவாசன் ஆய்வு செய்தார். பின்னர், கொலையாளிகளைப் பிடிக்க ஜீயபுரம் டி.எஸ்.பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ``இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடுவோம்" என்கின்றனர் போலீஸார்.

அடுத்த கட்டுரைக்கு