Published:Updated:

`ஊரடங்கிலும் பழிக்குப் பழி!’- திருச்சி ரவுடி `தலைவெட்டி' சந்துருவுக்கு நேர்ந்த கொடூரம்

 ரவுடி சந்துரு
News
ரவுடி சந்துரு

கொரோனா ஒழிப்புக்காக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்தச் சூழலில்கூட பழிக்குப் பழி கொலை அரங்கேறியிருப்பது, திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி, ஶ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே ஒருவர் தனது வெள்ளை நிற ஸ்கூட்டியில் இன்று காலை வந்துகொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த சொகுசுக் காரில் இருந்து இறங்கிய 3 பேர், ஸ்கூட்டியில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக் கொன்றனர்.

அடுத்த சில நிமிடங்களில், அந்தக் கார், திருச்சி ஶ்ரீரங்கம் காவல்நிலையத்தில் நின்றது. வெட்டிக் கொல்லப்பட்டவரின் தலையை ஒப்படைத்த கையோடு அவர்கள் சரணடைந்தனர். அப்போதுதான் கொலை செய்யப்பட்டவர் ரவுடி `தலைவெட்டி’ சந்துரு என்பது தெரியவந்தது.

கொல்லப்பட்ட  திருச்சி ரவுடி சந்துரு
கொல்லப்பட்ட திருச்சி ரவுடி சந்துரு

யார் இந்த ரவுடி `தலைவெட்டி’ சந்துரு? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருச்சி, ஸ்ரீரங்கம், டிரைனேஜ் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் என்கிற ரவுடி சந்துரு. ஆரம்பத்தில் அடிதடி வழக்குகளில் ஈடுபட்ட இவர், சில வருடங்களுக்கு முன்பு, பால்காரர் ஒருவரைக் கொலை செய்தார். அந்த நேரத்தில் திருச்சி பாலக்கரை பகுதியில் அதே பெயரில் சந்துரு என்பவர் ரவுடியாக வலம் வரவே, திருச்சியில் சந்துரு எனும் பெயரில் இரண்டு ரவுடிகள் வலம் வந்தனர். ஶ்ரீரங்கம் சந்திரமோகன் கொலை செய்யும்போது, தலையைத் துண்டாக்குவது இவரின் ஸ்டைல். அதனால் சந்திரமோகன், தலைவெட்டி சந்துருவானார்.

அடுக்கடுக்காக கிரைம்... தப்பிக்க அரசியல் கெட்-அப்!

தொடர்ந்து இவர், திருச்சி, ஶ்ரீரங்கம், உறையூர், தில்லைநகர் பகுதிகளில் பல்வேறு பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்தார். அதன் விளைவாக இவர்மீது ஸ்ரீரங்கம், உறையூர், எடமலைப்பட்டி புதூர் தில்லை நகர் மற்றும் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் 33 கொலை மற்றும் திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

அதனால், தன்னை தற்காத்துக்கொள்வதற்காக அரசியல்வாதியாகக் காட்டிக்கொண்டார். இதில், தி.மு.க நிர்வாகிகள் சிலரின் ஆதரவாளராகவும் இருந்து வந்தார். தொடர்ந்து இவர், கடந்த 2018 -ம் ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இவரின் நண்பரான மீன் பாலா என்பவருக்கும் ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த மீன் பாலா மற்றும் ரவுடி சந்துரு தரப்பு, பார்த்திபனைக் கல்லால் அடித்தே கொன்றது. இந்த வழக்கில் தனது அரசியல் செல்வாக்கால் சந்துரு தப்பியதாகக் கூறப்பட்டது.

திருச்சி ரவுடி சந்துரு
திருச்சி ரவுடி சந்துரு

இந்நிலையில், ஸ்ரீரங்கம் வீதிகளில் ரவுடி சந்துரு பட்டா கத்தியுடன் கடைகளை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலானது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்தவரை, போலீஸார் மதுரையில் கைது செய்தனர். தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் அடைத்தனர்.

அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து, வெளியே வந்த சந்துரு மீண்டும் திருச்சியில் தலைதூக்க ஆரம்பித்தார். இந்நிலையில், இன்று காலை ஸ்ரீரங்கம், தேவி தியேட்டர் மேம்பாலம் பகுதியில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால்காரர் ஒருவர், சந்துருவால் கொலை செய்யப்பட்டாராம். அதற்குப் பழிக்குப்பழியாகப் பால்காரரின் மகன் சுரேஷ், அவர் சகோதரர் சரவணன் ஆகியோர் தன் கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் மக்கள் முடங்கிக் கிடக்கும் சூழலிலும்கூட திருச்சியில் நடந்த பழிக்குப் பழி கொலை திருச்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.