Published:Updated:

`இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை

நிசாந்த்
நிசாந்த்

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் 6 பேர் சேர்ந்து வாழைக்காய் விஜயைப் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரெளடியை, ஐந்து பேர்கொண்ட கும்பல் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைப் பழிக்குப் பழியாக நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் போலீஸார். என்ன நடந்தது? விசாரித்தோம்.

திருச்சி மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். பிரபல ரெளடி. இவர் மீது தில்லை நகர், காந்தி மார்க்கெட் மற்றும் கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த `வாழைக்காய்’ விஜய் என்பவருக்கும் காந்தி மார்க்கெட், பால்பண்ணை பகுதிகளில் யார் கஞ்சா விற்பது? யார் பெரிய ரெளடி? என்கிற தொழில் போட்டி காரணமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு நிஷாந்த் மற்றும் அவரின் நண்பர்கள் 6 பேர் சேர்ந்து வாழைக்காய் விஜயைப் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

கொலை
கொலை

இந்நிலையில் இன்று அதிகாலை ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற நிஷாந்த்தை ஐந்து பேர் கொண்ட கும்பல் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. தகவல் அறிந்து வந்த காந்தி மார்க்கெட் போலீஸார் மற்றும் உயரதிகாரிகள், நிஷாந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெல்லி: 50 இடங்களில் கத்திக்குத்து; இளம்பெண் கொடூரக் கொலை! - கூட்டுப்பாலியல் வன்கொடுமையா?

என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ”நிஷாந்த் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையிலிருந்து வருகின்றன. இக்கொலைக்கான காரணம். யார் கஞ்சா விற்பது? யார் பெரிய ரெளடி ஆவது என்கிற போட்டி ஒருபுறம். மறுபுறம் கஞ்சா விற்பனை செய்ததில் வாழைக்காய் விஜய் என்பவரது குரூப்பிற்கும், நிசாந்த் குரூப்பிற்கும் மோதல் நீண்டகாலமாகவே நீடித்துவந்தன.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

அந்த மோதலில் வாழைக்காய் விஜய்யை நிஷாந்த் குரூப் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்துள்ளனர். அக்கொலை வழக்கில் சிறையிலிருந்து வந்த நிஷாந்த் கடந்த மாதம் தான் வெளியே வந்துள்ளார். அவனைக் கொல்ல விஜயின் அண்ணன் தம்பி மற்றும் அவரின் நண்பர்கள் முயற்சி செய்துகொண்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் முன்கூட்டியே தில்லை நகர் காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

நிசாந்த்
நிசாந்த்

இந்த சூழலில் தான் வாழைக்காய் விஜயையின் அண்ணன், தம்பிகள் மற்றும் நண்பர்கள் இணைந்து, நிஷாந்த் தினமும் எங்கு வருவான் எங்குப் போவான் என்கிற விவரத்தைத் தெரிந்துகொண்டு தெளிவாக ஸ்கெட்ச் போட்டுக் கொன்றிருக்கிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு