திருச்சியில் பிரபல ரெளடியாக கோலோச்சிவந்த ‘தலைவெட்டி’ சந்துரு என்பவரை, அவரது பாணியி லேயே தலையை வெட்டி கொலை செய்துள்ளது போட்டி ரெளடி கும்பல்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரெளடி ‘தலைவெட்டி’ சந்துரு என்கிற சந்திரமோகன். ஆரம்பத்தில் அடிதடி வழக்குகளில் ஈடுபட்டுவந்தார் சந்துரு. 2008-ம் ஆண்டு சந்துருவுக்கு எதிராக சாட்சி சொல்ல திருச்சி நீதிமன்றத்துக்கு வந்த நாராயணன் என்பவரிடம் ‘என் மகனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டாம்’ என சந்துருவின் தாய் வாசுகி கேட்டுக்கொண்டார். ஆனால், வாசுகியை அவமானப்படுத்தியதுடன், சந்துருவுக்கு எதிராக சாட்சியமும் அளித்தார் நாராயணன்.

சிறை சென்ற சந்துரு வெளியே வந்ததும், நாராயணனை ரங்கம் முனீஸ்வரன் கோயில் அருகே வெட்டிச் சாய்த்தார். பிறகு, தலையைத் துண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வைத்திருந்தார். அந்தக் கொலைக்குப் பிறகு சந்திரமோகன், ‘தலைவெட்டி’ சந்துரு ஆனார்.

அதன்பிறகு பல ரெளடிகளின் பழக்கம் கிடைக்கவே, திருச்சி சுற்றுவட்டாரம் முழுவதும் அவருடைய தாதாயிசம் பெருகியது. சந்துரு மீது ஸ்ரீரங்கம், உறையூர், தில்லை நகர், கொட்டப்பட்டு, திருவெறும்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கார் கடத்தல், கொலை உள்ளிட்ட 33 வழக்குகள் பாய்ந்தன. குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார் சந்துரு.

சில வருடங்களுக்கு முன்பு சந்துருவின் வலையில் பெண் காவலர் ஒருவர் விழ, இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அடுத்த சில மாதங்களில் சந்துருவின் முழு பின்னணி தெரிந்து பதறிய அந்தப் பெண் போலீஸ், விவாகரத்து வாங்கினார். அதன் பிறகு ஏரியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்தார். ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனை கல்லால் அடித்தே கொன்றது, தொழிலதிபரை பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட சம்பவங்களின் மூலம் தன்னுடைய ரெளடியிசத்தைத் தொடர்ந்தார் சந்துரு.

ஒருகட்டத்தில் தி.மு.க பக்கம் ஒதுங்கிய சந்துரு, உதயநிதி நற்பணி மன்றத்தில் மாவட்டப் பொறுப்பு கேட்டு மல்லுக்கட்டினார். இவரின் அரசியல் தலையீடுகளால், இவருக்கும் ஸ்ரீரங்கம் தி.மு.க பகுதிச் செயலாளர் ராம்குமாருக்கும் பகை வலுத்தது. தொடர்ந்து, ராம்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், சந்துரு சிறையில் அடைக்கப்பட்டார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சிறைகளில் இருந்த விசாரணைக் கைதிகளை தமிழக அரசு வெளியே விட்டதில் சந்துருவும் வெளியே வந்தார். இந்த நிலையில்தான், ஏப்ரல் 28-ம் தேதி தன் முன்று வயது மகளுடன் பைக்கில் காய்கறி வாங்கச் சென்றபோது, கொலை செய்யப்பட்டிருக்கிறார் சந்துரு. அவரின் தலையை துண்டித்த கொலையாளிகள் ஸ்ரீரங்கம் சரவணன், அவரின் அண்ணன் சுரேஷ் மற்றும் உறவினர் செல்வகுமார் உள்ளிட்ட மூன்று பேர் திருச்சி ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

‘‘ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் கடை வைத்துள்ளேன். சந்துரு தொடர்ந்து மாமுல் கேட்டு மிரட்டிவந்தார். தற்போது சிறையிலிருந்து வெளியே வந்த சந்துரு, ‘உன் தலையை வெட்டாமல் விட மாட்டேன்’ என்று எச்சரித்தார். அதனால், அவர் என் தலையை எடுப்பதற்குள் நாங்கள் அவர் தலையை எடுத்துவிட்டோம்’’ என்றபடி தலையை கொடுத்தாராம் சரவணன்.

வேறு சிலரோ, ‘‘ஸ்ரீரங்கம் பூ மார்கெட்டில் அ.தி.மு.க - தி.மு.க அதிகார யுத்தம் கொடிகட்டிப் பறக்கிறது. ஆரம்பத்தில் சரவணன், சந்துருவின் வலதுகரமாக இருந்தார். பஞ்சாபி ஒருவரை கொலை செய்த பிறகு சரவணன், சந்துருவிடம் இருந்து விலக ஆரம்பித்தார். தி.மு.க–வின் ஆதரவாளராக சந்துரு பந்தா காட்ட, சரவணன் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் நிழலில் நின்றார். சந்துரு சிறையில் இருந்த நேரங்களில், தனது பெயரைச் சொல்லி சரவணன் மாமுல் வசூலிப்பதாக தகவல் வரவே சரவணனுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தார் சந்துரு. அதனால், சரவணன் தரப்பு முந்திக்கொண்டு சந்துருவின் பாணியிலேயே அவரின் தலையை வெட்டிவிட்டது” என்கிறார்கள்.

சந்துருவின் இறுதிச்சடங்குக்கு வந்த அவரின் கூட்டாளிகள், தங்களின் ரத்தத்தில் சந்துருவின் சாவுக்குப் பழிதீர்ப்போம் என சத்தியம் செய்தார்களாம். பதிலுக்கு, ‘இனி ஸ்ரீரங்கம், சரவணன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்’ என்று பேசுகிறார்களாம் சரவணனின் ஆட்கள்.

கொரோனா ஊரடங்கில் குற்றங்கள் குறைந்ததாகச் சொல்கிறது காவல்துறை. ஆனால், கொடூரக் குற்றங்கள்தான் குறையவில்லை போலும்!