Published:Updated:

போலி ஆர்.சி புத்தகம் தயாரித்த ஆர்.டி.ஓ அலுவலர்கள்!- சிக்கவைத்த சி.சி.டி.வி கேமரா

கைதான ஆர்.டி.ஓ அலுவலர்கள்

திருச்சி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போலி ஆர்.சி புத்தகம் அச்சடிக்கப்பட்டது தொடர்பாக வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திடீர்த் திருப்பமாக சி.சி.டி.வி கேமராப் பதிவுகள் மூலம் 3 பேர் சிக்கியுள்ளனர்.

போலி ஆர்.சி புத்தகம் தயாரித்த ஆர்.டி.ஓ அலுவலர்கள்!- சிக்கவைத்த சி.சி.டி.வி கேமரா

திருச்சி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போலி ஆர்.சி புத்தகம் அச்சடிக்கப்பட்டது தொடர்பாக வாகன ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் திடீர்த் திருப்பமாக சி.சி.டி.வி கேமராப் பதிவுகள் மூலம் 3 பேர் சிக்கியுள்ளனர்.

Published:Updated:
கைதான ஆர்.டி.ஓ அலுவலர்கள்

திருச்சி திருவெறும்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவிரி நகர் பகுதியில் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாகன சோதனை ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராமன். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இரண்டு பழைய இன்னோவா கார்களுக்கு ஆர்.சி புத்தகம் தயாரித்துக்கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், தான் எதற்காகத் தண்டிக்கப்பட்டோம். நடந்த விவகாரம் எதுவும் அறியாமல் சுந்தர்ராமன் குழம்பித்தான் போனார்.

திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

தொடர்ந்து காரணத்தைக் கண்டறிய அவர் பணியாற்றும் திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவெறும்பூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக வேலை செய்யும் திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதிநகரைச் சேர்ந்த ஜோசப் மகன் அமலன் அன்புச்செல்வன், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் பாலசுப்ரமணியன், திருச்சி பாலகரையைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் செய்த தவற்றுக்குத் தனக்குத் தண்டனை என்பதுதான் அதற்கான காரணம்.

கடந்த பிப்ரவரி மாதம் 10-ம்தேதி, தற்காலிகப் பணியாளரான அமலன் அன்புச்செல்வன், அலுவலகத்தில் உள்ள சில கோப்புகளிலிருந்து சில தாள்களைக் கிழித்து எடுத்துச் செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது.

கைதான ஆர்.டி.ஓ அலுவலர்கள்
கைதான ஆர்.டி.ஓ அலுவலர்கள்

மேலும், மார்ச் மாதம் 24ம் தேதி மற்றொரு தற்காலிக ஊழியரான பாலசுப்பிரமணியன் என்பவரும் சில கோப்புகளை எடுத்துவந்து அமலன் அன்புச்செல்வனிடம் கொடுப்பதும், அதிலிருந்து அமலன் அன்புச்செல்வன் சில பேப்பர்களைக் கிழித்துச் செல்வதும் தெரியவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல், அடுத்த சில தினங்களில், சுந்தரமூர்த்தி ஒரு ஆவணத்தைக் கொண்டு வந்து தரவே அதிலிருந்தும் அமலன் அன்புச்செல்வன் சில தாள்களைக் கிழித்து எடுத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்தும் காமராவில் பதிவாகி இருந்தன.

அந்த பேப்பர்களை வைத்துக்கொண்டு, இந்தத் தற்காலிக ஊழியர்கள் கூட்டுச் சேர்ந்து இரண்டு பழைய இன்னோவா கார்களுக்குப் போலியாக ஆர்.சி புத்தகம் தயார் செய்தது அம்பலமானது.

வாகனங்கள்
வாகனங்கள்

தொடர்ந்து, கண்காணிப்பு கேமராக் காட்சிகளின் அடிப்படையில், ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுந்தர்ராமன் இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரின் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த நவல்பட்டு போலீஸார், அமலன் அன்புச்செல்வன், சுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூன்று 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்களாலேயே போலி ஆர்.சி புத்தகம் தயாரிக்கப்பட்டு, ஊழியர்கள் கைதான விவகாரம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism