Published:Updated:

புல்லட், கேக்; பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி! - போலீஸ் ரேடாரில் ஸ்ரீரங்கம் ரவுடி

பட்டாக் கத்தியில் கேக் வெட்டிய ரவுடி
பட்டாக் கத்தியில் கேக் வெட்டிய ரவுடி

ரவுடிகள் தங்கள் பிறந்தநாளை, தங்களது சாகாக்களுடன் சேர்ந்து விமரிசையாகக் கொண்டாடுவதும், உற்சாகத்தில் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக் வெட்டும் காட்சிகள் அவ்வப்போது நம்மை அதிர வைக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு திருச்சியிலும் அரங்கேறியது.

சென்னையில் ரவுடிகள் பட்டாக்கத்தியில் கேக்வெட்டி பிறந்த நாள் கொண்டாடத் தொடங்கிய கலாசாரம், தற்போது தமிழகம் முழுவதும் பரவத்தொடங்கிவிட்டது. சென்னை ரவுடி பினு, சேலம் ரவுடி ஜூசஸ் வரிசையில் ஸ்ரீரங்கம் அன்பு பிறந்தநாள் கொண்டாட்டமும் சர்ச்சையாகியிருக்கிறது. திருச்சி, ஶ்ரீரங்கம், நெடுந்தெருவைச் சேர்ந்த அன்பு என்கிற அன்பு தர்மராஜ். இவர் தனது பிறந்தநாளை நள்ளிரவு அவரது நண்பர்கள் சகிதமாக திருச்சி ஸ்ரீரங்கத்தில் புல்லட்டில் கேக் வைத்து பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

அன்பு
அன்பு

இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸார், சம்பந்தப்பட்ட நபரான அன்புவைத் தேடி வருகின்றனர்.போலீஸார் விசாரணையில், அன்பு தர்மராஜ் அரசியல் கட்சி ஒன்றில் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதி மாணவர் அணிச் செயலாளராக உள்ளாராம். தொடர்ந்து அவர் மீது அடிதடி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிறந்தநாள் கொண்டாடிய அன்பு, தனது நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியதாகத் தெரியவந்திருக்கிறது.

அதைப் புகைப்படம் எடுத்த அன்புவின் நண்பர்கள் ஜாலிக்காக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். ஆனால், தற்போது அதுவே வில்லங்கமாகிப் போனது என்கிறார்கள்.

`அரிவாளால் மனைவியோடு கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை!' - வைரல் வீடியோவால் சிக்கிய சென்னை `ரூட் தல'

சென்னையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியிலும் ரவுடிகள் பட்டா கத்தியுடன் கேக் வெட்டும் கலாசாரம் பரவிவருவதுதான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு