Published:Updated:

`மனைவியுடன் பேசாதே என்றேன், கேட்கல!'- ஆவேசத்தில் நண்பனின் தங்கை மற்றும் கணவரைக் கொன்ற வாலிபர்

அடுத்தவர் மனைவியுடன் தவறான நட்பில் இருந்துள்ளார் அண்ணன். இந்த சம்பவத்தில் அண்ணனின் தங்கை, அவரது கணவரைக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைசெய்யப்பட்ட விமல்ராஜ் மற்றும் அனிதா
கொலைசெய்யப்பட்ட விமல்ராஜ் மற்றும் அனிதா

நாமக்கல் மாவட்டம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பழக்கடை நடத்திவந்தார். இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு விமல்ராஜ், அனிதா மற்றும் அனிதாவின் தந்தை கருப்புசாமி ஆகிய 3 பேரும் வீட்டில் இருந்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல், அனிதா-விமல்ராஜ் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த கருப்பசாமியையும் அந்தக் கும்பல் வெட்டியது. பின்னர், அங்கிருந்து கும்பல் தப்பி ஓடிவிட்டது. இந்தத் தாக்குதலில், விமல்ராஜ்-அனிதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அனிதா
அனிதா

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த விமல்ராஜ்-அனிதா உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கருப்பசாமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

தோசை மாவில் தூக்க மாத்திரைகள்! - ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த காதல் மனைவி

இந்தச் சம்பவம்குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசினோம்.``நாமக்கல் காமராஜர் நகரைச் சேர்ந்த அருண், கோவையில் எலெக்ட்ரிக் கான்ட்ராக்ட் வேலை செய்துவருகிறார். இவரும் நிக்கல்சனும் நண்பர்கள். நிக்கல்சன் மனைவிக்கும் அருணுக்கும் தொடர்பு  இருந்துவந்துள்ளது. அப்போது, `என் மனைவியிடம் பேசாதே?' என்று நிக்கல்சன் அருணை பலமுறை கண்டித்துள்ளார். இதை அவர் கேட்கவில்லை. இதனிடையே, கடந்த ஒரு வாரமாகத் தனது மனைவி வீட்டில் இல்லாததால் ஆவேசம் அடைந்த நிக்கல்சன், அருணை செல்போனில் தொடர்புகொண்டு, `நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட  விமல்ராஜ்
கொலைசெய்யப்பட்ட விமல்ராஜ்

இதையடுத்து, அருண் வீட்டுக்கு காரில் வந்த மர்ம நபர்கள் அருண் வீட்டில் இருந்த அவரது தந்தை கருப்பசாமி, தங்கை அனிதா,  அவரது கணவர் விமல்ராஜ் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்றனர். பெண்ணிடம் பழகிய அண்ணனின் நடவடிக்கையால் தங்கை, அவரது கணவர் கொலை செய்யப்பட்டிருப்பது நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.