Published:Updated:

நாகர்கோவிலை அதிரவைத்த இரட்டைக் கொலை! - பைக்கில் வந்த 4 பேரைத் தேடும் போலீஸ்

பைக்கில் மோதி, அரிவாளால் வெட்டி இருவர் கொலை.

கொலை
கொலை

நாகர்கோவில் அருகே பைக்கில் சென்ற இரண்டு வாலிபர்களை வெட்டி கொலை செய்த நான்குபேர் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் விட்டுச் சென்ற பைக்கை துருப்புச்சீட்டாக வைத்து 3 பேரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.

அஜித்
அஜித்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் அஜித்(19). வண்டி குடியிருப்புப் பகுதியை சேர்ந்த அர்ஜுன்(17). இவர்கள் இருவரும் நண்பர்கள். அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் இன்று நாகர்கோவிலை அடுத்த பறக்கை சி.டி.என்.புரம் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் பைக் மீது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் திடீரென மோதினர். கீழே விழுந்த அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் சுதாரிப்பதற்கு முன், அவர்கள் நால்வரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மண்ணில் சாய்ந்த அஜித் மற்றும் அர்ஜுனை அப்படியே போட்டுவிட்டு பைக்குகளில் தப்ப முயன்றனர். பொதுமக்கள் அங்கு ஓடிவந்ததால் ஒரு பைக்கை அந்த இடத்தில் போட்டுவிட்டு மற்றொரு பைக்கில் ஏறி 4 பேரும் தப்பினர். வெட்டுப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

அர்ஜுன்
அர்ஜுன்

இதுகுறித்து தகவலின்பேரில் சுசீந்திரம் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். கிரிக்கெட் விளையாட்டின்போது கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிலருடன் அஜித் மற்றும் அர்ஜுனுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதம் காரணமாக அவர்கள் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் எனகூறப்படுகிறது. மேலும், காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கொலை
கொலை

இந்த கொலை சம்பந்தமாக விசாரணை மேற்கொண்ட எஸ்.பி. ஸ்ரீநாத், கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைத்துள்ளார். கொலை நடந்த இடத்தில் கொலையாளிகள் விட்டுச் சென்ற பைக்கின் விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் மூன்றுபேரை பிடித்து விசாரணை நடத்திவருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. நடு ரோட்டில் இரண்டு வாலிபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.