Published:Updated:

வங்கிக் கொள்ளையில் `திடீர்' திருப்பம் - இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கியது!

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் விசாரணை நடந்துவருகிறது. அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வங்கிக் கொள்ளையில் `திடீர்' திருப்பம் - இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் 3.5 கிலோ தங்கம் சிக்கியது!

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் விசாரணை நடந்துவருகிறது. அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது காவல்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Published:Updated:
அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை

சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டனிலுள்ள தனியார் வங்கிக் கிளையில் கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் காவலாளிக்குக் குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களைக் கட்டிப்போட்டும் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் அன்பு, இணை கமிஷனர் ராஜேஸ்வரி, அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

வங்கிக் கொள்ளை
வங்கிக் கொள்ளை

தனிப்படை போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் (30), அவரின் நண்பர் பாலாஜி (28) ஆகியோர் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் மாஸ்டர் மைண்டாகச் செயல்பட்ட சென்னை பாடியைச் சேர்ந்த அதே வங்கியில் கஸ்டமர் கேர் மேலாளராக இருந்த முருகன், திருமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதையடுத்து கொள்ளையடித்த தங்க நகைகளை கோவையில் விற்கச் சென்ற முருகனின் கூட்டாளியான சூர்யாவையும் போலீஸார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் 31 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தனிப்படை போலீஸார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் இன்னும் சிலரை போலீஸார் தேடிவந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றும் அமல்ராஜுக்கு தொடர்பிருக்கும் ரகசியத் தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக இந்தத் தகவல் காவல்துறை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. `யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்’ என்று மேலிடத்திலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜின் வீட்டுக்குத் தனிப்படை போலீஸார் சென்றனர். அவரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். தங்க நகைகள் குறித்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்
இன்ஸ்பெக்டர் அமல்ராஜ்

இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் குறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``தமிழக காவல் துறையில் கடந்த 1999-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக அமல்ராஜ் பணிக்குச் சேர்ந்தார். இவர், மேல்மருவத்தூர், கும்மிடிப்பூண்டி, உத்திரமேரூர் ஆகிய இடங்களில் பணியாற்றியிருக்கிறார். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. 2022 மே மாதம் முதல் தற்போது வரை அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார்" என்றார்.

வங்கிக் கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``இன்ஸ்பெக்டர் அமல்ராஜுக்கும் கொள்ளை வழக்கில் கைதானவர்களுக்கும் எந்தவகையில் தொடர்பு என்று விசாரணை நடத்தப்பட்டது. அதில், இந்த வழக்கில் கைதான சந்தோஷ் என்பவரின் உறவினர்தான் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் வீட்டில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக அமல்ராஜிடம் விசாரித்தபோது அவர் அமைதியாகவே இருக்கிறார். அதனால்தான் தகவல்களைச் சேகரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது" என்றனர்.