Published:Updated:

தேனி பெண் செவிலியர் கொலை வழக்கில் திருப்பம்... தற்கொலை செய்துகொண்ட கொலையாளி! - நடந்தது என்ன?!

கொலை
News
கொலை

செவிலியர் செல்வி கொலை வழக்கில் ஒரு மாதத்துக்குப் பிறகு திடீர் திருப்பம். தற்கொலை செய்துகொண்ட ஆண் செவிலியர்தான் கொலையாளி என்பதை கால் ரேகையைவைத்து போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரம் டிப்போ ரோட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் மனைவி செல்வி (43). இந்தத் தம்பதிக்கு, ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சுரேஷ் திண்டுக்கல்லில் கேட்டரிங் தொழில் செய்துகொண்டு, தன் இரு குழந்தைகளுடன் வசித்துவந்தார். செல்வி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தில் தங்கி, ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை செவிலியராகப் பணிபுரிந்துவந்தார். கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

செல்வி கடந்த மாதம் 24-ம் தேதி, ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் அவர் வசித்துவந்த வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு நிர்வாணமான நிலையில் கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீஸார் வழக்கு பதிந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் எந்தத் தடயமும் கிடைக்காமல் கால் ரேகை மட்டுமே கிடைத்தது. இதனால் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து செவிலியர் செல்வியுடன் தொடர்பில் இருந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர் போலீஸார்.

செவிலியர்
செவிலியர்

இதில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட 50 நபர்களையும், இறந்த செவிலியருடன் தொடர்பில் இருந்தவர்கள், வீட்டுக்கு பால், தண்ணீர் சப்ளை செய்பவர் என 300 நபர்களின் கால் ரேகைகளைச் சேகரித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்துவந்தனர். ஆனால், கொலைச் சம்பவம் குறித்து எந்தத் துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் தவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்திலிருந்து வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும்படி போலீஸாருக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் செவிலியர் கொலை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை இந்த மாதம் 10-ம் தேதி போலீஸார் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது தேனி அருகேயுள்ள கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரபிரபு (34) என்பவரையும் அழைத்தனர். இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார்.

அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரணைக்கு நாளைக்கு வர வேண்டும் என்று கூறி வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அடுத்த நாள் காலை, அதாவது 1 -ம் தேதி ஆண் செவிலியர் ராமச்சந்திரபிரபு உத்தமபாளையம் அருகேயுள்ள ஊத்துக்காடு பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாதாக அவரின் சடலம் மீட்கப்பட்டது.

ராமச்சந்திரபிரபு
ராமச்சந்திரபிரபு

இதையடுத்து இறந்த ராமச்சந்திரபிரபு மீது போலீஸாருக்கு சந்தேகம் அதிகரித்தது. அதனால், ராமச்சந்திரபிரபு குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர்.

பல்வேறுகட்ட விசாரணைக்குப் பின்னர் ஆண்டிபட்டி செவிலியர் செல்வியைக் கொலை செய்தது மருத்துவப் பணியாளர் ராமச்சிந்திரபிரபுதான் என்பதை, தற்போது போலீஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, `செவிலியர் கொலை வழக்கு குறித்து மருத்துவப் பணியாளர் ராமச்சந்திரபிரபுவிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆரம்பத்திலிருந்தே அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவந்தார். செவிலியர் செல்வியிடம் செல்போனில் அடிக்கடி பேசியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வரும்படி அழைத்திருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்துகொண்டார். கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வியும், மருத்துவப் பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்துவந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியபோதும், இவர்களுக்கிடையேயான உறவு நீடித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இருவருக்கும் இடையே பல லட்சக்கணக்கில் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. இவற்றில் கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்கையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கலாம். சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிபட்டி வந்த ராமச்சந்திரபிரபு, செவிலியர் செல்வியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அந்தச் சண்டையில் ராமச்சந்திரபிரபு செவிலியர் செல்வியை கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் சுமார் 3:40 மணிக்கு வீட்டைவிட்டு வெளியேறி, அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த மூன்ரு பவுன் தங்க செயினையும் எடுத்து கொண்டு சென்றிருக்கிறார். ராமச்சந்திரபிரபு வந்து சென்றது, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வீட்டில் பதிவாகியிருந்த கால் ரேகையும் ராமச்சந்திரபிரபுவின் கால் ரேகையும் ஒத்துப் போகிறது. மேலும் ராமச்சந்திரபிரபுதான் செவிலியர் செல்வியிடம் கடைசியாக போனில் பேசியுள்ளார்.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் செவிலியர் செல்வி கொலை செய்யப்பட்டதற்குப் பின்னர் அவரின் மூன்று பவுன் தாலி செயினை தேனி, பழனிசெட்டிபட்டியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திரபிரபு அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சி, கால் ரேகை, நகையை அடகு வைத்தது உள்ளிட்டவற்றை உறுதி செய்த பின்னரே ராமச்சந்திரபிரபுதான் குற்றவாளி என உறுதி செய்தோம்” எனத் தெரிவித்தார்.