Published:Updated:

சென்னை ரயில் நிலைய விவகாரத்தில் ட்விஸ்ட்... கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ரயில்வே ஊழியர் கைது!

திருவான்மியூர் ரயில் நிலையம்
News
திருவான்மியூர் ரயில் நிலையம்

இந்த வழக்கில் புதிய திருப்பமாக, ரயில்வே ஊழியர் டிக்காராம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பணத்தை டிக்காராம்தான், தன் மனைவியின் உதவியுடன் கொள்ளையடித்துவிட்டு நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நேற்று டிக்கெட் எடுக்க பயணிகள் கவுன்ட்டருக்குச் சென்றபோது அது மூடியிருந்தது. அதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். நீண்டநேரமாக டிக்கெட் கவுன்ட்டர் மூடப்பட்டிருந்ததால், அது தொடர்பாக ரயில்வே காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக ரயில்வே போலீஸார் அங்கு வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. கவுன்ட்டருக்குள் ரயில்வே ஊழியர் ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். அவரின் வாயையும் கொள்ளையர்கள் சத்தம் போட முடியாத அளவுக்கு அடைத்திருந்தனர்.

கொள்ளை
கொள்ளை

அதைப் பார்த்த ரயில்வே போலீஸார் உடனடியாக ஊழியரை மீட்டு என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது மூன்று பேர் கவுன்ட்டருக்குள் வந்து, துப்பாக்கிமுனையில் தன்னை மிரட்டி கை கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுச் சென்றதாகத் தெரிவித்தார். பின்னர் ரயில்வே ஊழியர் டிக்காராம் புகாரளித்ததின் பேரில் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு போலீஸார் தடயங்களைச் சேகரித்தனர். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததைக் கொள்ளையர்கள் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறப்பட்டது. இதனால் போலீஸார் அருகிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ரயில் நிலைய கொள்ளி
ரயில் நிலைய கொள்ளி

தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பமாக, ரயில்வே ஊழியர் டிக்காராம் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பணத்தை டிக்காராம்தான், தன் மனைவியின் உதவியுடன் கொள்ளையடித்துவிட்டு நாடகமாடினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் டிக்காராமின் மனைவி ரயில் நிலையம் வந்து செல்வது பதிவாகியுள்ளது. மனைவியை வரவழைத்து, தன்னைக் கட்டிப்போடச் சொல்லி, டிக்காராம் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.