Published:Updated:

தோழி வீட்டுக்குச் சென்ற மாணவி மாயம்?! ; தேடிய பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த மகள்! -நடந்தது என்ன?

ஸ்வேதாவுக்கு சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகன் டேனியல் (26) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. டேனியல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த மாணவி தான் காதலித்த நபரோடு சென்று, ரகசியத் திருமணம் செய்துகொண்ட சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல்
நாமக்கல்
நா.ராஜமுருகன்
கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஸ்வேதா, தற்போது நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். ஏற்கனவே ஒரு முறை இந்த நீட் தேர்வை எழுதிய அவர், அதில் தேர்ச்சி பெறவில்லை. இந்தநிலையில், ஸ்வேதா தற்போது இரண்டாவது முறையாக நீட் தேர்வை எழுதினார்.

அதன் பிறகு, ஸ்வேதா தனது பெற்றோரிடம், தோழியின் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், மூன்று நாள்களாக வீட்டுக்குத் திரும்பவில்லையாம். இதனால், பதறிப்போன பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடிவந்தனர். மாணவி ஸ்வேதாவின் தோழிகள் வீடுகளுக்கெல்லாம் சென்று விசாரித்தனர். ஆனால், ஸ்வேதா எங்கும் இல்லாததால், அவரின் பெற்றோர் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில், நீட் எழுதிவிட்டு வீட்டைவிட்டுச் சென்ற தங்கள் மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். அவர்களின் புகாரைப் பெற்றுக்கொண்ட நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார், வீட்டைவிட்டுச் சென்ற ஸ்வேதாவைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்த மாணவியின் தந்தை செந்தில்பாண்டியன், அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றிவருகிறார். ஸ்வேதா தனியார் பள்ளியின் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருக்கிறார். கடந்த வாரம் திருச்செங்கோட்டிலுள்ள அந்தத் தனியார் பள்ளியில் சுவேதா நீட் தேர்வு எழுதினார். அதனால், போலீஸார் திருச்செங்கோடு தனியார் பள்ளி, அந்த மாணவியின் தோழிகள் எனப் பலதரப்பிடம் விசாரணை நடத்தினர். ஆனால், ஸ்வேதா காணாமல்போனது பற்றி எந்தத் தகவலும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தங்களது மகள் நீட் தேர்வுக்கு பயந்து, ஏதாவது தவறாக முடிவெடுத்துவிட்டாளோ என்று அவரின் பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.

திருச்செங்கோடு
திருச்செங்கோடு
நா.ராஜமுருகன்

இதனால் குழப்பமடைந்த நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார், மாணவி ஸ்வேதாவின் வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, தோழி வீட்டுக்குச் செல்வதாகக் கூறி, வீட்டைவிட்டுச் சென்ற ஸ்வேதா, வெளியே வந்தது, தனது துப்பட்டாவைக்கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டு, இளைஞர் ஒருவருடன் பைக்கில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஸ்வேதாவை கூட்டிச் சென்ற இளைஞர் குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், ஸ்வேதா தேனி மாவட்டம், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் காதலனுடன் தஞ்சமடைந்தார். ஸ்வேதாவுக்குச் சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகன் டேனியல் (26) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. டேனியல் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இந்தநிலையில்தான், டேனியல் சென்னையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் நாமகிரிப்பேட்டைக்கு வந்திருக்கிறார். பின்னர், ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு தேனியிலுள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நண்பர் வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பேளுக்குறிச்சி முருகன் கோயிலுக்குச் சென்று திருமணம் செய்துகொண்டனர். பின்னர், தேனி மாவட்டம் சென்று உத்தமபாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர்.

ரயிலில் அனுப்பப்பட்ட பெண் உடல் மாயம்; 200 கிலோமீட்டர் தூரத்தில் மீட்பு!

ஸ்வேதாவை நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் தீவிரமாகத் தேடுவதை அறிந்துகொண்ட இருவரும், உத்தமபாளையம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து, காதல் ஜோடியை அழைத்து வருவதற்கு நாமகிரிபேட்டையிலிருந்து தனிப்படை போலீஸார் தேனிக்கு விரைந்துள்ளனர். அங்கு காதல் ஜோடியிடம் போலீஸார் விசாரணை நடத்திவருவதாகத் தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு