Published:Updated:

டெல்லி: ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - ஆப்கன் கடத்தல் நபர்கள் சிக்கியது எப்படி?

சிறப்பு கமிஷனர் தாலிவால்

டெல்லியில் ஆப்கன் பிரஜைகள் இரண்டு பேர் ரூ.1,200 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி: ரூ.1,200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் - ஆப்கன் கடத்தல் நபர்கள் சிக்கியது எப்படி?

டெல்லியில் ஆப்கன் பிரஜைகள் இரண்டு பேர் ரூ.1,200 கோடி மதிப்பு போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
சிறப்பு கமிஷனர் தாலிவால்

குஜராத் துறைமுகத்துக்குச் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்திவரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதே போன்று பாகிஸ்தானிலிருந்து பஞ்சாப்புக்கு போதைப்பொருள் கடத்திவரப்படுகிறது. கடத்தல்காரர்கள் சில நேரத்தில் டிரோன்களை இதற்குப் பயன்படுத்துகின்றனர். பஞ்சாப்பிலிருந்து அவை டெல்லி போன்ற மெட்ரோ நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. டெல்லியில் இப்போது ரூ.1,200 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டிருக்கிறது.

டெல்லியில் ஆப்கன் பிரஜைகள் இரண்டு பேர் காரில் போதைப்பொருள் கடத்திவருவதாக டெல்லி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி மீதாபூர் சாலையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஸ்கோடா காரை மடக்கி சோதனை செய்து 312 கிலோ மெத்தம்பேட்டமைன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். போதைப்பொருளைக் கடத்திய காரில் இருந்த ஆப்கனைச் சேர்ந்த முஸ்தாபா, ரஹிமுல்லா ரஹிம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

போதைப்பொருள்
போதைப்பொருள்

இருவரும் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் வசித்துவருகின்றனர். அவர்கள் போதைப்பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் தாலிவால் கூறுகையில், ``ஸ்கோடா காரில் இருவர் போதைப்பொருள் கடத்துவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு ஸ்கோடா காரை மடக்கி சோதனை செய்தோம். அதில் எதுவும் இல்லை. ஆனால் காரில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்களது காருக்கு பின்னால் மகேந்திரா பிக்கப் வேன் ஒன்று வருவது தெரியவந்தது. அந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் 16 பேக்குகள் இருந்தன். அவற்றில் 9 பேக்குகளில் இருந்தது போதைப்பொருள் என்று தெரியவந்துள்ளது. அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி நொய்டாவில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து திரவ வடிவில் 5.13 கிலோ போதைப்பொருளும், உலர்ந்த பழங்களில் இருந்த 1.7 கிலோ ஹெராயினும், பவுடர் வடிவில் 1.09 கிலோ போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன. இரண்டு இடத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.1,200 கோடி” என்று தெரிவித்தார்.

மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பதற்காக வளர்க்கப்படும் செடிகள் ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மத்திய ஆப்கன் பகுதியில் பல நூறு ஆண்டுகளாக இந்தச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருள்தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு இரான் வழியாகக் கடத்தப்படுகிறது.