Published:Updated:

கோவை: கொரோனாவில் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.8 லட்சம் திருட்டு - 2 பேர் கைது

கொரோனா வைரஸ்

கோவை அவிநாசி சாலையிலுள்ள கே.எம்.சி.ஹெச் என்கிற தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டைத் திருடி லட்சக்கணக்கில் பணம் எடுத்த இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

கோவை: கொரோனாவில் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ.8 லட்சம் திருட்டு - 2 பேர் கைது

கோவை அவிநாசி சாலையிலுள்ள கே.எம்.சி.ஹெச் என்கிற தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் ஏ.டி.எம் கார்டைத் திருடி லட்சக்கணக்கில் பணம் எடுத்த இருவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கொரோனா வைரஸ்

கோவை அவிநாசி சாலையில் கே.எம்.சி.ஹெச் என்கிற தனியார் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த யசோதா என்கிற பெண்,

கோவை
கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த ஆண்டு, மே மாதம் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி யசோதா உயிரிழந்துவிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், யசோதாவின் கணவர் முருகசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, யசோதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு மூலம்,

கொரோனா மரணம்
கொரோனா மரணம்

கடந்த மே மாதம் முதல் பல்வேறு தவணைகளில் ரூ.8.5 லட்சம் பணம் எடுக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. இது குறித்து, முருகசாமி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது, மருத்துவமனையில் பணியாற்றிய அஸ்ஸாம் மாநில தூய்மைத் தொழிலாளிகள் ராஜ்பங் சிங் (31), அதுல் ஜகோகை (55) ஆகியோர் ஏ.டி.எம் கார்டைத் திருடி, கடந்த ஓராண்டாக பணம் எடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஏ.டி.எம் கார்ட்டின் பின்புறம் யசோதா பின் நம்பரையும் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து, இருவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism