Published:Updated:

4 வயது சிறுவன் கிணற்றில் தள்ளிக் கொலை; 13 வயது சிறுவர்கள் இருவர் கைது! என்ன நடந்தது?

சிவகாசி
சிவகாசி

விருதுநகரில் தங்கள் பாட்டியை எதிர்த்துபேசி, திட்டியதால் கோபத்தில் 4 வயது சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்டுக் கொலை செய்த இரண்டு சிறுவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகாசி அருகே விஸ்வநத்தம், திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், அந்தப் பகுதியிலுள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவருக்கு பிரியதர்ஷன் என்ற 8 வயது மகனும், தீனதயாளன் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். பக்கத்து வீட்டின் அருகில் குவிக்கப்பட்டிருந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த தீனதயாளனை நேற்று மாலை முதல் காணவில்லை. பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிவகாசி டவுன் போலீஸில் அந்தச் சிறுவனின் தந்தை பார்த்திபன் புகாரளித்தார்.

உயிரிழந்த சிறுவன்
உயிரிழந்த சிறுவன்

இதையடுத்து, போலீஸார் சிறுவன் விளையாடியதாகச் சொன்ன பகுதியிலுள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பார்த்திபனின் பக்கத்து வீ்ட்டில் குடியிருக்கும் அல்போன்சா என்பவரின் பேரன், 8-ம் வகுப்பு படித்துவரும் ராஜ்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 7-ம் வகுப்பு படித்துவரும் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுவன் தீனதயாளளை அழைத்துக்கொண்டு நடந்து செல்வது சிசிடிவியி-ல் பதிவாகியிருந்தது. அதைத் தொடர்ந்து, அந்த இரண்டு சிறுவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், ``எங்க பாட்டி அல்போன்சா வீட்டு முன்னால குவிச்சுவைக்கப்பட்டிருந்த மணல்ல தீனதயாளன் விளையாடிக்கிட்டிருந்தான்.

அவன் விளையாண்டதுனால மண்ணு சரிஞ்சுது. அவனை எங்க பாட்டி சத்தம் போட்டாங்க. தீனதயாளன் எங்க பாட்டியைத் திட்டினான். எங்க பாட்டியை எதிர்த்து பேசித் திட்டினதுனால எனக்குக் கோவம் வந்துச்சு. அதனால பக்கத்து வீட்டுல இருக்குற கண்ணனுடன் சேர்ந்து தீனதயாளனைக் கூட்டிக்கிட்டு போய் கிணத்துல தள்ளிவிட்டுட்டோம்” என ராஜ்குமார் கூறியிருக்கிறான்.

சிறுவன் தள்ளிவிடப்பட்ட கிணறு
சிறுவன் தள்ளிவிடப்பட்ட கிணறு

அதைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் அருகிலுள்ள கிணற்றிலிருந்து தீனதயாளனின் சடலத்தை மீட்டனர். இது குறித்து ராஜ்குமார், கண்ணன் இரு சிறுவர்களையும் சிவகாசி டவுன் போலீஸார் கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு