Published:Updated:

சென்னை: மாயமான இரண்டு சிறுமிகள்; சிறார் வதை! - இரு வேறு சம்பவங்களில் போக்சோவில் கைதான இளைஞர்கள்

பாலியல் வன்கொடுமை ( Representational Image )

சென்னையில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை: மாயமான இரண்டு சிறுமிகள்; சிறார் வதை! - இரு வேறு சம்பவங்களில் போக்சோவில் கைதான இளைஞர்கள்

சென்னையில் இரண்டு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( Representational Image )

சென்னை மாதவரம் காவல் மாவட்டத்தில் வசித்துவரும் 17 வயது சிறுமியைக் கடந்த 18.8.2021-ம் தேதி முதல் காணவில்லை. அதனால் சிறுமியின் பெற்றோர், 19.8.2021-ம் தேதி மணலி புதுநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், சிறுமியைத் தேடிவந்தனர். அதோடு, சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியை திருவள்ளூர் மாவட்டம், விச்சூர் தாலுகா, கொடிபள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதனால் ராஜேஷ்குமாரை போலீஸார் தேடினர். அப்போது அவரும் மாயமாகியிருந்தார்.

சிறுமி
சிறுமி

இதையடுத்து சிறுமியையும் ராஜேஷ்குமாரையும் போலீஸார் தேடிவந்த நிலையில் இருவரும் ஒரே இடத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் ராஜேஷ்குமாரைப் பிடித்து, சிறுமியை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது இருவரும் காதலித்ததாகவும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதால் ராஜேஷ்குமாருடன் திருவள்ளூருக்குச் சென்றதாகவும் கூறியிருக்கிறார். மேலும், திருவள்ளூரில் வைத்து தன்னைத் திருமணம் செய்துகொண்ட ராஜேஷ்குமார், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து இந்த வழக்கு மணலி புதுநகர் காவல் நிலையத்திலிருந்து எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ்குமாரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

இன்னொரு சம்பவம்:

சென்னை அடையார் காவல் மாவட்டத்தில் 20.8.2021-ம் தேதி 17 வயது சிறுமியைக் காணவில்லை என அந்தச் சிறுமியின் அம்மா கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிறுமியை இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் (21) என்ற இளைஞரும் சிறுமியும் காதலித்த தகவல் தெரியவந்தது.

திருமணம்
திருமணம்

சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய சதீஷ், அவரை அழைத்துச் சென்று கோயிலில்வைத்து தாலி கட்டியிருக்கிறார். பிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. சிறுமியை மீட்டு கவுன்சலிங் அளித்ததோடு மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற கிண்டி அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் சதீஷைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

சென்னையில் வெவ்வேறு இடங்களில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism