Published:Updated:

மும்பை: தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் கைது!

தாவூத் இப்ராஹிம்

மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் இரண்டு பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைதுசெய்துள்ளது.

மும்பை: தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் கைது!

மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் இரண்டு பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைதுசெய்துள்ளது.

Published:Updated:
தாவூத் இப்ராஹிம்

மும்பையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில நாள்களுக்கு முன்பு தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சலீம் புரூட் கைதுசெய்யப்பட்டார். இந்த ரெய்டைத் தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா சகீலுக்கு மிகவும் நெருங்கிய கூட்டாளிகளான ஆரிப் அபுபக்கர் ஷேக், சபீர் அபுபக்கர் ஷேக் ஆகிய இரண்டு பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி கைதுசெய்துள்ளது.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

அவர்கள் இரண்டு பேரிடமும் தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிர விசாரணை நடத்திவருகிறது. இந்த ரெய்டைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய இடங்களில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்திருந்தது.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் அது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது. சோட்டா சகீல் பாகிஸ்தானில் இருந்துகொண்டு மும்பையில் மிரட்டிப் பணம் பறித்தல், ஹவாலா பணப் பரிவர்த்தனை, போதைப்பொருள் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது
சித்தரிப்புப் படம்

அவரைக் கைதுசெய்ய இன்டர்போல், ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேசத் தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமும், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறார். அவரைப் பற்றித் தகவல் கொடுத்தால் 25 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாவூத் இப்ராஹிம், அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளது. இந்தத் வழக்கை தொடர்ந்து அமலாக்கப் பிரிவு மும்பையில் ரெய்டு நடத்தி தாவூத் இப்ராஹிமின் சகோதரியின் மகன் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism