Published:Updated:

கோவை: பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! - இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

கோவை தனியார் பள்ளி மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்த வழக்கில், திடீர் திருப்பமாக இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

கோவை: பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்! - இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

கோவை தனியார் பள்ளி மாணவி கடந்த ஆண்டு தற்கொலை செய்த வழக்கில், திடீர் திருப்பமாக இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்தத் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் அதே பள்ளியில் பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். மாணவியிடம் அவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தற்கொலை
தற்கொலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருதப்பட்டது, அங்கு கைப்பற்றப்பட்ட கடிதம்தான். அதில், `யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார் ****** (கெட்டவார்த்தை) யாரையும் விடக்கூடாது' என்று குறிப்பிடப்பட்டிந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிதுன் சக்கரவர்த்தி போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார். அதே போல அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் என்பவரும் கைதுசெய்யப்பட்டிருந்தார். இருப்பினும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மற்ற இரண்டு பேர் யார் என கேள்விகள் எழுந்தன.

கடிதம்
கடிதம்

அப்போதே பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், மாணவியின் குடும்பத்தினரும், போலீஸாரும் இது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் இரண்டு முதியவர்கள் போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் ஜமாத் நிர்வாகி முகமது சுல்தான் (70), இறந்த மாணவியின் வீடு அமைந்திருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மனோராஜ் (58) ஆகிய இரண்டு பேர் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இதில் சுல்தான் என்பவர் மாணவியின் வீட்டில் அருகில் வசித்தவர் என்றும், மனோராஜ் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். ``மாணவி இறந்த போது கைப்பற்றப்பட்டக் கடிதத்தை நாங்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தோம். சோதனை முடிவுகள் அண்மையில்தான் கிடைத்தன. அதன் மூலம் கடிதம் இறந்த மாணவி எழுதியதுதான் என்பது உறுதியானது. அதையடுத்து, கடிதத்தில் மாணவி குறிப்பிட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தற்போது இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.