Published:Updated:

சொத்து தகராறு: பெண்ணைக் கொன்றதோடு 6 பேரை வெட்டிய இளநீர் வியாபாரி; அடித்துக் கொன்ற பஞ்சர் கடைக்காரர்!

க்ரைம் - கொலை

சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவரை வெட்டிக் கொன்ற இளநீர் வியாபாரி... மேலும் 6 பேரைச் சரமாரியாக வெட்டிய நிலையில், பஞ்சர்கடைக்காரரால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். நடந்தது என்ன?

சொத்து தகராறு: பெண்ணைக் கொன்றதோடு 6 பேரை வெட்டிய இளநீர் வியாபாரி; அடித்துக் கொன்ற பஞ்சர் கடைக்காரர்!

சொத்துப் பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவரை வெட்டிக் கொன்ற இளநீர் வியாபாரி... மேலும் 6 பேரைச் சரமாரியாக வெட்டிய நிலையில், பஞ்சர்கடைக்காரரால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். நடந்தது என்ன?

Published:Updated:
க்ரைம் - கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள அழிவிடைதாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் செல்வம், இரண்டாவது மனைவியின் மகன் சுப்பிரமணி, இளநீர் வியாபாரி. இருவருக்கும் இடையே நீண்டநாள்களாக நிலத்தகராறு இருந்து வந்திருக்கிறது. மேலும், பங்காளியான காந்தி என்பவருடனும் பிரச்னை இருந்துவந்திருக்கிறது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணி வயலுக்குச் சென்றபோது, அவருடைய அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதா துணிகளைத் துவைத்து காயவைத்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சுப்பிரமணி, தான் வைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியால் துணியைக் காயவைக்கும் கயிற்றை அறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் ஆத்திரமடைந்த சுப்பிரமணி... தான் வைத்திருந்த கத்தியால் சங்கீதாவை வெட்டியிருக்கிறார். இதைப் பார்த்த, பக்கத்து நிலத்துக்காரர் வெங்கடேசனின் மனைவி வேண்டாமிர்தம், சுப்பிரமணியைத் தடுத்திருக்கிறார். அப்போது, அவரையும் ஓங்கி வெட்டியிருக்கிறார் அவர். இந்தச் சம்பவத்தில், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார் வேண்டாமிர்தம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தனது உயிரைக் காத்துக்கொள்ள தப்பியோடிய சங்கீதா, தன் கணவர் செல்வம், வேண்டாமிர்தத்தின் கணவர் வெங்கடேசனிடம் நடந்தவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோதே, அவரைத் துரத்திவந்த சுப்பிரமணி... செல்வம், வெங்கடேசன், சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். அப்போது, அவரை வழிமறித்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலேந்திரன் என்பவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார். நேராக வெண்பாக்கம் சென்ற சுப்பிரமணி, அங்கு பஞ்சர்கடை நடத்திவரும் தனது பங்காளி காந்தியிடம், 'உன்னாலதான் என் பெயருக்குப் பட்டா மாற்றம் செய்ய முடியாம இருக்கு' என்று கூறி சண்டையிட்டதோடு, தான் மறைத்துவைத்திருந்த இளநீர் வெட்டும் கத்தியைக்கொண்டு காந்தியையும் வெட்டியிருக்கிறார். இதைத் தடுக்க வந்த காந்தியின் மனைவி லதாவின் கையிலும் வெட்டினார் அவர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த காந்தி... கடையிலிருந்த இரும்புக்கம்பியை எடுத்து சுப்பிரமணியின் பின் மண்டையில் பலமாகத் தாக்கியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தார் சுப்பிரமணி. இந்தச் சம்பவம் குறித்து அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு செய்யாறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
மாதிரி படம்

காயமடைந்ததில் ஐந்து பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், இரு தரப்பிலும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், 302 பிரிவில் இரண்டு வழக்குகளைப் பதிவுசெய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சொத்துப் பிரச்னையின் தொடர்ச்சியாக ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறினால், இரு உயிர்கள் பறிபோன சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.