Published:Updated:

செல்போனில் ஆபாசப் படம்; சைபர் க்ரைம் போலீஸார் என சிறுவனிடம் பணம் பறிப்பு! - சிக்கியது எப்படி?

சைபர் க்ரைம் போலீஸார் பெயரைக் கூறி பணம் பறித்தவர்கள்
சைபர் க்ரைம் போலீஸார் பெயரைக் கூறி பணம் பறித்தவர்கள் ( 342242449056101 )

``ஆபாசப் படம் பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால உன் மீது விரைவிலேயே வழக்கு பதிவு செய்ய இருக்கோம். வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நாங்கள் சொல்லும் கூகுள் பே நம்பருக்கு ரூ.20,000 வரை பணம் அனுப்ப வேண்டும்" எனப் பேசியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், மாணவனின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்ட ஒருவர், ``நான் சைபர் க்ரைம்ல இருந்து பேசுறேன். நீ தொடர்ந்து ஆபாசப் படம் பார்த்துக்கிட்டு இருக்கே. அதை டிராக் பண்ணி கண்டுபிடிச்சுட்டோம். ஆபாசப் படம் பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால் விரைவிலேயே வழக்கு பதிவு செய்யவிருக்கோம். வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நாங்கள் சொல்லும் கூகுள் பே நம்பருக்கு ரூ.20,000 பணம் அனுப்ப வேண்டும்” எனப் பேசியுள்ளனர்.

இதனால் பயந்துபோன அந்தச் சிறுவன் தந்தையிடம் வேறு காரணங்களைக் கூறி ரூ.20,000 பணத்தை வாங்கி அந்த கூகுள் பே நம்பருக்கு அனுப்பிவைத்துள்ளார். இதையடுத்து இது பற்றித் துருவித் துருவி விசாரித்த சிறுவனின் சித்தப்பாவிடம், நடந்த சம்பவத்தைச் சிறுவன் கூற, சைபர் க்ரைம் போலீஸாரை நேரடியாகச் சந்தித்து இது பற்றிக் கேட்டறிந்தார். அப்போதுதான், சைபர் க்ரைம் போலீஸார் பெயரைச் சொல்லி மர்ம நபர்கள் சிறுவனை ஏமாற்றிப் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனின் சித்தப்பா கொடுத்த புகாரின் பேரில் மர்ம நபர்களை தேடிவந்தனர்.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

சிறுவனைத் தொடர்புகொண்ட நபர்களின் செல்போன் எண், கூகுள் பே எண் ஆகியவற்றை வாங்கினர். அதன் பிறகு சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன் (43), அவரின் உறவினர் பிரகாஷ் (24) என்ற இருவரைக் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இது பற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``இது போன்றவர்கள் மொபைல் உபயோகப்படுத்தும் சிறுவர்களைக் குறிவைத்துத்தான் பணம் பறித்தலில் ஈடுபடுகின்றனர். அதற்கு சைபர் க்ரைம் போலீஸாரின் பெயரைப் பயன்படுத்தினால், பயந்து உடனே பணம் அனுப்பிவிடுவார்கள் என்று சிறுவர்களின் மொபைலை சில அப்ளிகேஷன் வழியாக ஆராய்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுவருகின்றனர். இது போன்று சைபர் க்ரைம் போலீஸாரின் பெயரைச் சொல்லி யாரேனும் போன் செய்து பணம் கேட்டால், உடனடியாகச் சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் தகவலைத் தெரிவிக்கணும். அதேநேரத்தில் சிறுவர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பது போன்ற தவறான நடவடிக்கைகளுக்குச் செல்கிறார்களா என்பது குறித்துப் பெற்றோர்கள் சிறுவர்களை கண்காணித்து, கண்டிக்க வேண்டும்" என்றனர்.

நெல்லை: கஞ்சா போதை... ஆபாசப் படம்... பாலியல் தொல்லை - 3 இளைஞர்களால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு