Published:Updated:

சேலம்: பண்ணை வீட்டில் சிறார் வன்கொடுமை! - சிறுமிகள் புகாரால் சிக்கிய தோட்ட உரிமையாளர், பூசாரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறார் வன்கொடுமை
சிறார் வன்கொடுமை ( நா.ராஜமுருகன் )

காவல்துறையினர் இரண்டு சிறுமிகளிடமும் விசாரணை மேற்கொண்டபோது பூசாரி சேகரும், சுக்கம்பட்டி ரவீந்திரனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். இதனால் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ளது பறவைக்காடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாவு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளி. இவரின் மனைவி ருக்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கிறார்கள். இவர்களில் 17 வயதான சிறுமி ஒருவரும், 15 வயதான சிறுமி ஒருவரும் சேலம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரின் பண்ணை வீட்டில் தங்கி தோட்ட வேலைகளில் ஈடுபட்டுவந்தனர்.

ரவீந்திரன்
ரவீந்திரன்

கொரோனா தொற்று காரணமாக இரண்டு சிறுமிகளும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பறவைக்காட்டூரிலுள்ள தங்கள் பெற்றோர் வசிக்கும் வீட்டுக்கு வந்தனர். இரண்டு சிறுமிகளும் சோர்வாக இருந்ததால், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூசாரி சேகர் என்பவரிடம் அழைத்துச் சென்று காண்பித்திருக்கிறார்கள் பெற்றோர். அப்போது பூசாரி சேகர் இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

அதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இரண்டு சிறுமிகளிடமும் விசாரணை மேற்கொண்டபோது பூசாரி சேகரும், சுக்கம்பட்டி ரவீந்திரனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பூசாரி சேகரை போக்சோ சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து சிறுமிகளின் பெற்றோரும் உறவினர்களும் சேலம் வீராணம் காவல் நிலையத்துக்கு வந்து ரவீந்திரன் மீது புகார் கொடுத்தனர். சேலம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமி தலைமையிலான போலீஸார் விசாரித்து, கடந்த 21-ம் தேதி இரவு ரவீந்திரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைதுசெய்தனர்.

பாலியல்
பாலியல்

பின்னர் ரவீந்திரன் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். அப்போது ரவீந்திரனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரவீந்திரன் சேலம் அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனா சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு