Published:Updated:

திருச்சி: பிரதமர், முதல்வர் படத்துடன் விளம்பரம்! - கூட்டுறவுச் சங்கத்தின் பெயரில் மோசடி

போலி கூட்டுறவு சங்கம்
போலி கூட்டுறவு சங்கம்

கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் போலியாக ஆவணங்களைப் பயன்படுத்தியும், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

திருச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, போலி கூட்டுறவு நிறுவனம் தொடங்கி, வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற நபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு ஆட்கள் தேர்வு
வேலைக்கு ஆட்கள் தேர்வு

கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்களை ஏமாற்றிப் பல மோசடி புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. காவல்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் நாளுக்கு நாள் மோசடி குறித்த தகவல்கள் வந்துகொண்டே உள்ளன. இந்நிலையில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மற்றும் லால்குடியில் திறக்கப்படவுள்ள பாரத விவசாய கூட்டுறவுச் சங்கம் லிமிடெட் நிறுவனத்துக்கு சேல்ஸ் மேன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவை என போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

போஸ்டரில் சென்ட்ரல் கோ-ஆப்ரடிவ் வங்கி என்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. கொரோனா காலகட்டத்தில் பலரும் வேலை இழந்துள்ள நிலையில் விளம்பர போஸ்டரை பார்த்ததும் ஏதோ அரசு நிறுவனம் போலும் என அனைவரையும் நம்பச் செய்தது.

போலி கூட்டுறவு சங்கம்
போலி கூட்டுறவு சங்கம்

இதையடுத்து ஏராளமான இளைஞர்கள், பட்டதாரிகள் வேலைக்கான இன்டர்வியூ நடக்கப்போகிறது என்று எல்லோரும் குவியத்தொடங்கினார்கள். தகவலறிந்த மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் துணைப் பதிவாளர் சித்ரா புகாரின் பேரில் பாரத விவசாய கூட்டுறவுச் சங்கம் என்று போலியாகத் திருச்சி தில்லை நகரில் நிதி நிறுவனம் நடத்திய தென்னூரைச் சேர்ந்த சந்தானம் அவரின் தந்தை சண்முகம் இருவரையும் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் நாஞ்சில் குமரன் தலைமையில் கைது செய்தனர்.

ராமநாதபுரம்: `ஞானவேல் ராஜா ஆஜராக உத்தரவு!’ - வேகமெடுக்கும் ரூ. 3 கோடி மோசடி வழக்கு

இது குறித்து வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். ``கூட்டுறவுச் சங்கம் என்ற பெயரில் போலியாக ஆவணங்களைப் பயன்படுத்தியும், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி ஆகியோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், வேலைக்கு ஆள் எடுப்பது எனவும் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் வந்தது.

வேலைக்கு ஆட்கள் தேர்வு
வேலைக்கு ஆட்கள் தேர்வு

அதைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தோம். கூட்டுறவுச் சங்கத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மோசடி வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றோம்” என்று முடித்துக்கொண்டர்.

அடுத்த கட்டுரைக்கு