Published:Updated:

`செக்கிங் இன்ஸ்பெக்டரால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!' - குமரியைக் கலங்கடிக்கும் சிறார்வதைகள்

சிறார் வதை குற்றங்கள்
சிறார் வதை குற்றங்கள் ( மாதிரி படம் )

நாகர்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்ற சிறுவனை ஆசிரியை தாக்கிய சம்பவம், குளச்சல் பகுதியில் டியூஷனுக்குச் சென்ற மாணவியை வீட்டில் அடைத்து வைத்து தாக்கிய சம்பவம் ஆகியவை ஒரே வாரத்தில் நடந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார் வதையில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குமாரபுரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ரத்தின சிவா (வயது 36). கட்டட தொழிலாளியான இவர் அந்தப் பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. ரத்தின சிவா தொடர்ந்து பல நாள்கள் மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ரத்தின சிவா
ரத்தின சிவா

இதுகுறித்து அவரின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ரத்தின சிவாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். நேற்று முன்தினம் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று 8 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக போக்குவரத்துக் கழக செக்கிங் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`ஐபேடில் ஆயிரக்கணக்கில் சிறார்வதை வீடியோக்கள்!' - சென்னை மாணவியால் சிக்கிய 72 வயது முதியவர்

கன்னியாகுமரியை அடுத்த மயிலாடியைச் சேர்ந்தவர் குருசாமி (58). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் அழுதபடியே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, குருசாமியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர்.

செக்கிங் இன்ஸ்பெக்டர் குருசாமி
செக்கிங் இன்ஸ்பெக்டர் குருசாமி

நாகர்கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்ற சிறுவனை ஆசிரியை தாக்கிய சம்பவம், குளச்சல் பகுதியில் டியூஷனுக்குச் சென்ற மாணவியை வீட்டில் அடைத்து வைத்து கத்தி, கரண்டிகளால் தாக்கிய சம்பவம் ஆகியவை ஒரே வாரத்தில் நடந்தன. நாகர்கோயில் பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் சிறார் வதை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பின் செல்ல