Published:Updated:

ஆடு மேய்க்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை; இரண்டு பேர் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் வன்கொடுமைக் கொலையில் கைதுசெய்யப்பட்ட சதீஷ்
பாலியல் வன்கொடுமைக் கொலையில் கைதுசெய்யப்பட்ட சதீஷ்

ஒரத்தநாடு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸ் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மூன்று பேர் சேர்ந்து ராணியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகத் தெரிவித்தனர்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ராணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வயது 31. வீட்டிலிருக்கும் ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவருவது அவரது வழக்கம்.

கைதுசெய்யப்பட்ட பெரியசாமி
கைதுசெய்யப்பட்ட பெரியசாமி

காலை 8 மணிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று அருகே உள்ள பொட்டங்காடு வடவாறு கரையோரம் மேய்ச்சலுக்கு விட்டு, பின்னர் மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புவார். அவரின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 25-ம் தேதி ஆடு மேய்க்கச் சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன. ராணியைக் காணவில்லை. இரவு நேரமாகியும் ராணி வீட்டுக்கு வராததால் அவரின் பெற்றோர் பதற்றமாகி ராணியைத் தேட ஆரம்பித்தனர்.

பாலியல் கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷ்
பாலியல் கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷ்

மரங்கள் நிறைந்த புதர் மண்டிய பகுதியில் ராணியின் செருப்பும், அவர் ஆடுகளுக்கு இலை வெட்டிப் போடுவதற்கு எடுத்துச் செல்லும் அரிவாளும் கிடந்தன. இதைப் பார்த்த ராணியின் அப்பா அதிர்ச்சியடைந்து புதருக்குள் சென்று பார்த்தபோது ராணி உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் இது தொடர்பாக அம்மா பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீஸார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பாபநாசம் டி.எஸ்.பி பூரணி, அம்மா பேட்டை இன்ஸ்பெக்டர் கரிகால் சோழன் உள்ளிட்ட போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து கொலை நடந்த பகுதியில் மீன்பிடிக்கும் தூண்டில் மட்டும் கிடந்தது. உடனே அந்தப் பகுதியில் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்தவர்கள் குறித்து போலீஸ் விசாரித்தனர். அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி, சதீஷ் என்ற இருவரும் அந்தப் பகுதியில் மீன் பிடித்தனர் எனத் தெரிந்து அவர்களைத் தேடியிருக்கின்றனர்.

சாலையில் கிடந்த பாலியல்  தொழிலாளியின் சடலம்; கைதான கணவன், மனைவி; நடந்தது என்ன?

ஒரத்தநாடு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் மூன்று பேர் சேர்ந்து ராணியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். `` ராணி தனி ஆளாக ஆடு மேய்க்க செல்வதை, மீன்பிடிக்கும் பெரியசாமி கொஞ்ச நாளாகவே நோட்டமிட்டு வந்திருக்கிறான். சம்பவத்தன்று பெரியசாமியுடன் சதீஷ் என்பவனும் சேர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

இருவரும் மது போதையில் இருந்திருக்கின்றனர். தூண்டிலால் ராணியின் தலைப்பகுதியில் தாக்கியிருக்கின்றனர். ராணி தப்பிக்க முயற்சிக்க, அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். மூன்றாவதாக மற்றொரு நபரையும் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதில் அப்பெண் உயிரிழந்தார். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து இளம் பெண்ணைக் கொலை செய்த மூன்று பேரில் பெரியசாமி, சதீஷ் இருவரையும் கைதுசெய்துவிட்டோம். தலைமறைவாகிவிட்ட மற்றொருவனைத் தேடிவருகிறோம்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு