Published:Updated:

ஒரு வாரத்தில் 13 பேர்.. தேனி போலீஸுக்கு அதிர்ச்சிகொடுக்கும் கள்ளச்சாராயம்!

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

பெரியகுளம் அருகே எலுமிச்சை தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், போதைக்காக, சேவிங் லோஷன், வார்னிஸ் போன்றவற்றை குடித்து மரணிப்பது ஒருபுறம் நடந்தாலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது மறுபுறம் அதிகரித்து வருகிறது என்றே கூறலாம். தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் மட்டும், கடமலைக்குண்டு, வருசாநாடு என மூன்று பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய, காய்ச்ச முற்பட்ட என 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று, பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் எலுமிச்சை தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தேவதானப்பட்டி
தேவதானப்பட்டி

இது தொடர்பாக தேவதானப்பட்டி போலீசார் கூறும் போது, ”தேவதானப்பட்டி அருகே உள்ள டி.வாடிப்பட்டி என்ற கிராமத்தில், சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது. அதனை அடுத்து மதுவிலக்கு தனிப்படை மற்றும் தேவதானப்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டோம்.

தேனி ஆண்டிபட்டியில் தலைதூக்கும் கள்ளச்சாராயம்..! - இரண்டே நாளில் 11 பேர் கைது

அப்போது எலுமிச்சை தோட்டம் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கொடுத்தனர். தோட்டத்தில் சோதனை செய்த போது, கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் வேலம்பட்டை, வெல்லம் உட்பட அனைத்துப் பொருள்களையும் தயார் செய்து கள்ளச்சாராயம் காய்ச்ச இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்தோம்” என்றனர்.

தேவதானப்பட்டி காவல்நிலையம்
தேவதானப்பட்டி காவல்நிலையம்

முன்னதாக, தேனி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கண்காணிக்க, தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும், கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேனி மாவட்ட எஸ்.பி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

`ரேஷன் பொருள் வந்துருச்சு.. அதை வச்சு என்ன பண்றது?' -கலங்கும் தேனி பழங்குடியின கிராம மக்கள்
அடுத்த கட்டுரைக்கு