Published:Updated:

தலைக்கேறிய மது போதை; சைடிஷுக்காக நாய்க் காதை அறுத்து சாப்பிட்ட இளைஞர்கள்! - `உ.பி' பகீர்

மது போதை

குடிபோதையில் இரு நாய்களின் வால், காதை அறுத்து உப்பில் தொட்டுச் சாப்பிட்ட இருவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தலைக்கேறிய மது போதை; சைடிஷுக்காக நாய்க் காதை அறுத்து சாப்பிட்ட இளைஞர்கள்! - `உ.பி' பகீர்

குடிபோதையில் இரு நாய்களின் வால், காதை அறுத்து உப்பில் தொட்டுச் சாப்பிட்ட இருவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
மது போதை

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேர் மது அருந்தியபோது சாப்பிட எதுவும் கிடைக்காமல், போதையில் அருகில் நின்ற நாய்களின் வால், காதுகளை அறுத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சம்பவ இடத்தில் அதிகாரிகள்
சம்பவ இடத்தில் அதிகாரிகள்

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்திலிருக்கும் ஃபரித்பூர் என்ற இடத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்திருக்கிறது. முகேஷ் வால்மீகி என்பவரும், அவரின் நண்பரும் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். மது அருந்த சைட்டிஷ் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் அருகில் இரண்டு நாய்கள் ஏதாவது சாப்பிட கிடைக்காதா என்ற ஆசையில் வந்து நின்றிருக்கின்றன. உடனே முகேஷும், அவரின் நண்பரும் சேர்ந்து ஒரு நாயின் வாலை அறுத்தனர். அந்த நாய் ரத்தத்தோடு தப்பியோடியது. உடனே மற்றொரு நாயின் காதை அறுத்தனர்.

நாய்
நாய்
மாதிரிப் படம்

காது, வால் ஆகிய இரண்டையும் உப்பில் முக்கி எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இருவரும் மது அருந்தினர். அவர்களின் இந்தச் செயலை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் தீரஜ் பதக் என்பவர் இது குறித்து உள்ளூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இதை போலீஸ் அதிகாரி அகிலேஷ் உறுதிப்படுத்தியிருக்கிறார். அதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். காது, வால் அறுபட்ட நாய்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

ரேபரேலியில் விலங்குகள் சித்ரவதைக்கு உள்ளாவது இது முதன்முறை கிடையாது. இதற்கு முன்பு இதே ரேபரேலியில் சிலர் நாய் வாலில் கல்லைக் கட்டி சாக்கடையில் மூழ்கடித்துக் கொலைசெய்திருந்தனர்.