Published:Updated:

தி.மலை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7-ம் வகுப்பு சிறுமி... சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது!

பாலியல் வன்கொடுமை ( மாதிரி படம் )

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறார் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தி.மலை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7-ம் வகுப்பு சிறுமி... சிறார் உட்பட இருவர் போக்சோவில் கைது!

சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சிறார் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை ( மாதிரி படம் )

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர், அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு பயின்றுவருகிறார். அந்தச் சிறுமியின் தாயார், அயல் மாநிலத்துக்குச் சென்று வீட்டு வேலை செய்துவருகிறாராம். ஆகவே, தன் பாட்டியின் அரவணைப்பில் தங்கி பயின்றுவருகிறார் அச்சிறுமி.

திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையம்
திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துவரும் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் மார்பின்சிரில் என்பவனுக்கும், அச்சிறுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, சிறுமி வீட்டில் தனிமையில் இருக்கும் சமயத்தில் நேரில் சென்ற அந்த இளைஞன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறிப் பேசிவிட்டு, சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், 'இதை வெளியில் சொல்லக் கூடாது' என்று மிரட்டியுள்ளாராம். அதேபோல, அடுத்த ஐந்து நாள்களிலேயே மீண்டும் ஒரு முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் மார்பின்சிரில்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமின்றி, ஒரு முறை சிறுமியைச் சந்திக்க நேரில் சென்றபோது, தன்னுடன் ஹோட்டலில் வேலை செய்யும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறான். அந்த அறிமுகத்தின்படி, சிறிது நாள்கள் கழித்து அச்சிறுமியை 17 வயதான இளம் சிறாரும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான். இந்தக் கொடூரக் குற்றச் செயல்கள், இவ்விருவராலும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுவருவது தொடர்பாக சைல்டு லைனுக்கு ரகசியத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சைல்டு லைன் 1098
சைல்டு லைன் 1098

அதன் அடிப்படையில் சிறுமியை மீட்ட அரசு அதிகாரிகள், திருவண்ணாமலை வரவேற்பு இல்லத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் 26.04.2022 அன்று மாலை புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட ஆய்வாளர் அன்பரசி, உடனடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார். 17 வயது சிறார் உட்பட சம்பந்தப்பட்ட இருவரையும் கைதுசெய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளைஞன் மார்பின்சிரில், வேலூர் மத்திய சிறைக்கும்; 17 வயது சிறார், கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம், திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism