Published:Updated:

சேலம் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகளுடன் சிக்கிய நபர்கள்! - வருமான வரித்துறை விசாரணை

சேலம் ரயில் நிலையம்

சேலம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுக்காப்புப் படையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம் மற்றும் நகைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாகப் பணம், நகைகளுடன் சிக்கிய நபர்கள்! - வருமான வரித்துறை விசாரணை

சேலம் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுக்காப்புப் படையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாகச் சிக்கிய பணம் மற்றும் நகைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
சேலம் ரயில் நிலையம்

ரயில்வே பாதுக்காப்புப் படையினர் சேலம் ரயில் நிலையத்தில், கடந்த 8-ம் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ரயில் நிலைய சுரங்கப் பாதையில் சந்தேகம்படும்படியாக நின்றுகொண்டிருந்த மூன்று நபர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனை செய்தபோது, அதில் ரூ.20 லட்சம் இருந்தது தெரியவந்தது. போலீஸார் இது குறித்து சம்பந்தப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, சேலத்தில் இரும்புப் பொருள்கள் வாங்க வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப்படையினர் பணத்துடன் மூன்று பேரையும் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த மார்ச், 10-ம் தேதி இரவு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்ஸில் ரயில்வே பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் அணில்குமார் ரெட்டி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒவ்வொரு பையாகச் சோதனை செய்துகொண்டே வரும்போது, ஒரு நபரின் பேக்கில் கட்டுக்கட்டாக 11,61,430 ரூபாய் பணமும், 880 கிராம் தங்க நகையும் கண்டெடுத்துள்ளனர்.

சேலம் ரயில் நிலையம்
சேலம் ரயில் நிலையம்

அதைத் தொடர்ந்து ரயில்வே பாதுக்காப்புப்படையினர் விசாரணை செய்ததில் இதைக் கொண்டுவந்தவர் கோவை களம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் விக்னேஸ்வர மூர்த்தி என்றும், இவர் கோவையில் நகை உற்பத்தி செய்பவர்களிடம் நகை வாங்கி விற்றுவருகிறார் என்பதும் தெரியவந்தது. பின்னர் பணத்துக்கும் நகைகளுக்கும் உரிய ஆவணம் இல்லாததால் ரயில்வே காவல்துறை மூலம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில்களில் வழக்கமாகச் சோதனையின்போது மதுபாட்டில்கள் பிடிப்பட்டுவந்த நிலையில், தற்போது கட்டுக்கட்டாக பணம், நகைகள் அடுத்தடுத்து சிக்குவது சேலம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism