Published:Updated:

தென்காசி இரட்டைக் கொலைக்கு திருமணம் மீறிய உறவு காரணமா?- கொலைக்கு பின் கோயிலில் மொட்டையடித்த கொலையாளி

கொலைசெய்யப்பட்ட சூர்யராஜ், ஆனந்த்

கொலை செய்த பின்னர், தான் இத்தனை நாளாகக் காத்திருந்த சம்பவத்தை நடத்தி முடித்த திருப்தியுடன் கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து சிறப்பு வழிபாடு செய்திருப்பதை போலீஸ் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

தென்காசி இரட்டைக் கொலைக்கு திருமணம் மீறிய உறவு காரணமா?- கொலைக்கு பின் கோயிலில் மொட்டையடித்த கொலையாளி

கொலை செய்த பின்னர், தான் இத்தனை நாளாகக் காத்திருந்த சம்பவத்தை நடத்தி முடித்த திருப்தியுடன் கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து சிறப்பு வழிபாடு செய்திருப்பதை போலீஸ் விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
கொலைசெய்யப்பட்ட சூர்யராஜ், ஆனந்த்

தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகேயுள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஆனந்த். 29 வயதான இவர், அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளிடம் பால் வாங்கி விற்பனை செய்துவருகிறார். அவருக்கு உதவியாக 17 வயது நிரம்பிய சூர்யராஜ் என்பவர் இருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் வழக்கம்போல பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது, வழியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவரையும் இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

கொலையான ஆனந்த்
கொலையான ஆனந்த்

இந்த இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என ஆனந்த், சூர்யராஜ் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் தலையிட்டு சமரசம் செய்ததால், சாலைமறியல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், செல்வக்குமார், சுதாகர் ஆகியோர் இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது. அதன்படி இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், ”இந்த வழக்கில் கைதான செல்வக்குமார் ஊத்துமலை அருகேயுள்ள கங்கணாகிணறு பகுதியில் வசித்துவந்திருக்கிறார். அவரின் மனைவியுடன் ஆனந்த் உறவில் இருந்திருக்கிறார். இது தொடர்பாக மனைவியுடன் செல்வக்குமார் சண்டையிட்டதால் அவரின் மனைவி, தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னரும் ஆனந்த் அவருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது செல்வக்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட சூர்யராஜ்
கொலை செய்யப்பட்ட சூர்யராஜ்

இந்த நிலையில், மனைவி தன்னைவிட்டுப் பிரிந்ததற்குக் காரணம் ஆனந்த் என்று கருதிய செல்வக்குமார் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். அதனால் தனது உறவினருடன் திட்டமிட்டு இருவரும் சேர்ந்து ஆனந்தை வழிமறித்து கம்பியால் தாக்கி கொலைசெய்திருக்கிறார்கள். அங்கிருந்து தப்பியோட முயன்ற 17 வயது சிறுவன் சூர்யராஜையும் விரட்டிச் சென்று கொலை செய்திருக்கிறார்கள்.

இந்தக் கொலையைச் செய்ததும், தான் இத்தனை நாள்களாக எதிர்பார்த்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டதாக நினைத்த செல்வக்குமார் உடனடியாக அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குச் சென்று மொட்டையடித்து வழிபட்டிருக்கிறார். அவரின் செல்போன் சிக்னல் மூலம் அங்கே சென்று அவரைக் கைதுசெய்தோம். கொலை நடந்தபோது செல்வகுமாருக்கு உதவியாக இருந்த சுதாகரும் கைதாகியிருக்கிறார்” என்றார்கள்.