Published:Updated:

`சத்தம் கேட்டுச்சு.. வந்துபார்த்தா..!’- திருவள்ளூர் இரட்டைக் கொலையில் போலீஸிடம் மக்கள் சாட்சியம்

காலை 10 மணியளவில் பயங்கர வெடிசத்தத்தோடு உயிருக்குப் போராடும் அலறல் சத்தம் கேட்டது. விபத்து எனக் கருதி சம்பவ இடத்துக்கு வந்தபோது இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர் என மக்கள் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸ்
கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே பன்னூர் என்ற இடத்தில் இன்று காலை இருவர் வந்துகொண்டிருந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், திடீரென பைக்கில் சென்றவர்கள் மீது வெடிகுண்டை வீசியது. அதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக இருவரையும் வெட்டிச் சாய்த்தனர்.

கொலை
கொலை
`நீ மட்டும் குடும்பம், குழந்தைகளோடு இருக்கிறாய்!' -ஆசிரியையின் விபரீத முடிவால் சிக்கிய பேராசிரியர்

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்தக் கொலை சம்பவம் குறித்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் சம்பவம் நடந்த இடம் திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களின் எல்லைப்பகுதி. இரண்டு மாவட்ட போலீஸாரும் முதற்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர், திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு போலீஸார் இரட்டைக் கொலை குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``மப்பேடு பகுதியிலிருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது. காலை 10 மணி முதல் 11 மணிக்குள் இந்தக் கொலை நடந்துள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் பைக்கில் சென்ற இருவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை
கொலை

பைக்கில் சென்றவர்கள் மீது முதலில் வெடிகுண்டை வீசிய கும்பல், அதன்பிறகுதான் அரிவாள், கத்தியால் வெட்டியுள்ளனர். கொலை செய்யப்பட்ட இருவர் யாரென்று தெரியவில்லை. அவர்கள் ஓட்டிவந்த பைக் நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது கோபி (25), பெரிய காஞ்சிபுரம் என்ற முகவரி கிடைத்துள்ளது. ஆனால், கோபிதான் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தப்படவில்லை.

முதற்கட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு ரவுடிக் கும்பலுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதில் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்திலிருந்து மெயின் ரோட்டில் ஓடிய மோப்ப நாய், சிறிது தூரத்துக்குப்பிறகு நின்றது. கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.

முதலில் ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் அலறல் சத்தம் கேட்டது. அதனால் விபத்து என்றே முதலில் கருதினேன். ஆனால், சம்பவ இடத்துக்கு வந்தபோதுதான் கொலை என்று தெரிந்தது.
கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்கும் நிபுணர்
கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்கும் நிபுணர்

முதலில் கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அடுத்தகட்ட விசாரணையை நடத்த முடியும். அதனால் கொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவரின் முகம் அடையாளம் தெரியாதளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளது. அதனால் இன்னொருவரின் புகைப்படத்தைக் கொண்டு அடையாளம் காண முயற்சிகள் நடந்துவருகின்றன. மேலும், கொலை நடந்த நேரத்தில் அந்தப்பகுதியின் செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.

கொலை செய்யப்பட்ட இருவருக்கும் 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கும். ஒருவர் லைட் ப்ளு நிற பேன்ட்டும் இன்னொருவர் ப்ளு நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளனர். அவர்களின் உடல் முழுவதும் கருகிய நிலையில் காணப்படுகிறது. அதனால் பெட்ரோல் குண்டு வீசி இந்தக் கொலை நடந்திருக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர். மேலும், இருவரும் டிஎன் 21 பி.எப் 3250 என்ற பதிவு எண் கொண்ட நம்பரில் வந்துள்ளனர். அந்தப் பைக்கிற்கு எந்தவித சேதமும் இல்லை.

`நீயா கொலை பண்ண..காமெடி பண்ணாத...!' - சரணடைய வந்தவரைத் திருப்பி அனுப்பிய தேனி போலீஸ்
பைக்
பைக்

கொலை நடந்த இடத்தின் அருகில் குடியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அப்போது அவர்கள், ``முதலில் ஏதோ ஒன்று வெடிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் அலறல் சத்தம் கேட்டது. அதனால் விபத்து என்றே முதலில் கருதினேன். ஆனால், சம்பவ இடத்துக்கு வந்தபோதுதான் கொலை என்று தெரிந்தது'' என்று போலீஸாரிடம் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்ட எல்லைப்பகுதியில் பட்டப்பகலில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.