Published:Updated:

திண்டிவனம்: தொடர் செயின் பறிப்பு; உதவிய சிசிடிவி காட்சிகள் - இரண்டு பேர் கைது!

இரண்டு பேர் கைது!

திண்டிவனம் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டுவந்த இரண்டு பேர் பிடிபட்டிருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், கார், பைக், ஆயுதம் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

திண்டிவனம்: தொடர் செயின் பறிப்பு; உதவிய சிசிடிவி காட்சிகள் - இரண்டு பேர் கைது!

திண்டிவனம் பகுதியில் தொடர் செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டுவந்த இரண்டு பேர் பிடிபட்டிருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், கார், பைக், ஆயுதம் ஆகியவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
இரண்டு பேர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக செயின் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு மர்ம நபர்கள், தொடர் கைவரிசையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் இருந்துவந்தனர். எனவே, இந்தத் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைப் பிடிப்பதற்காக மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் எஸ்.ஐ சண்முகம் தலைமையில் ஆறு பேர்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா, செயின் பறிப்பு (மாதிரி படம்)
ஏ.எஸ்.பி அபிஷேக் குப்தா, செயின் பறிப்பு (மாதிரி படம்)

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இந்தத் தனிப்படை அதிகாரிகள் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், சந்தேகத்துக்கிடமான இரண்டு நபர்களை நேற்றைய தினம் தனிப்படை போலீஸார் அதிரடியாக கைதுசெய்திருக்கின்றனர். அந்த இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகேயுள்ள குருமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், வினோத் குமார் என்பதும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்திருக்கிறது.

அவர்களிடமிருந்து களவுப் பொருள்கள் சுமார் 25 சவரன் தங்க நகைகள், களவுக்குப் பயன்படுத்திய கார், பைக், கத்தி ஒன்றையும் போலீஸார் கைப்பற்றியிருக்கின்றனர். மேலும், இருவர்மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்கு சிசிடிவி காட்சிகள் பெரிதும் உதவியதால், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும், வெளியூர் மற்றும் விழாக்களுக்குச் செல்லும்போது அணிந்துகொள்ளும் நகைகளை பத்திரமாகப் பார்த்துக்கொண்டு, கவனமாக இருக்கவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.