Published:Updated:

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு: கைதான இரண்டு காவலர்கள் - சிபிசிஐடி வளையத்தில் 12 பேர்

விசாரணைக் கைதி விக்னேஷ்

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் இரண்டு காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கு: கைதான இரண்டு காவலர்கள் - சிபிசிஐடி வளையத்தில் 12 பேர்

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் இரண்டு காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
விசாரணைக் கைதி விக்னேஷ்

சென்னை கெல்லீஸ் சந்திப்பில் 18.4.2022 -ம் தேதி இரவு 11:30 மணியளவில் தலைமைச் செயலக காலனி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னா ஆகியோர் 50 கிராம் கஞ்சா, மது பாட்டில்கள், கத்தி ஆகியவற்றுடன் ஆட்டோவில் வந்தது போலீஸ் சோதனையில் தெரியவந்தது. இதனால் அவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்

விசாரணைக் கைதி விக்னேஷ்
விசாரணைக் கைதி விக்னேஷ்

இதைத் தொடர்ந்து 19.4.2022 -ம் தேதி காலையில் திடீரென விக்னேஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே போலீஸார் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விசாரணைக் கைதி மரணம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படை தீபக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.

சிசிடிவி
சிசிடிவி

இந்த வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்திய சி.பி.சி.ஐ.டி விக்னேஷின் சந்தேக மரண வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், காவலர்கள் எனத் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்த 12 பேரை விசாரணை வளையத்தில் கொண்டுவந்திருக்கிறது. நேற்று காலை 11 மணி முதல் நள்ளிரவு தாண்டி விசாரணை நீடித்த நிலையில், காவலர் பவுன்ராஜ் காவல் நிலைய எழுத்தாளர் முனாஃப் ஆகியோரை விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்தனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

வாகன சோதனையின்போது விக்னேஷ் காவலர் பொன் ராஜைத் தாக்கியதும், பின்னர் காவல் நிலையத்தில் வைத்து முனாஃப் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர்கள் புகழும் பெருமாள், கணபதி, தலைமைக் காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி, ஊர்க்காவல் படை வீரர் தீபக், வாகன ஓட்டுநர் கார்த்திக் உள்ளிட்டோர் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் இருக்கின்றனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவலர்கள் இருவர் கைதான நிலையில், மேலும் கைது நடவடிக்கை தொடர வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism