Election bannerElection banner
Published:Updated:

கரூர்: பட்டப்பகலில் கத்திமுனையில் 15 பவுன் நகை வழிப்பறி! - ஆசிரியைகளுக்கு நேர்ந்த சோகம்

பட்டப்பகலில் கத்திமுனையில் 15 பவுன் நகை வழிப்பறி
பட்டப்பகலில் கத்திமுனையில் 15 பவுன் நகை வழிப்பறி

மணிமேகலையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் தரும்படி மிரட்டியிருக்கிறார்கள். ஆனால், தங்க நகையைக் கொடுக்க மறுத்ததால், அவர் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு, ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.

பள்ளிக்கு டூ வீலர்களில் பயணித்த இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியைகளின் பதினைந்தரை பவுன் நகையை, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், பட்டப்பகலில் ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் வழிப்பறி செய்துவிட்டுச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வழிப்பறி நடைபெற்ற இடம்
வழிப்பறி நடைபெற்ற இடம்
நா.ராஜமுருகன்
கரூர்: மூன்று குழந்தைகளுக்கும் விஷம்... தற்கொலை முயற்சி! - பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது ஏமூர் சீத்தப்பட்டி. இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக மணிமேகலை என்பவர் பணியாற்றிவருகிறார். இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக ராமப்பிரியா என்பவர் பணியாற்றிவருகிறார்.

இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் இலவசப் புத்தகங்களை வழங்க மணிமேகலையும், ராமப்பிரியாவும் பள்ளிக்கு இரண்டு டூ வீலர்களில் பயணித்திருக்கிறார்கள். இருவரும் ஏமூர் அருகேயுள்ள சீத்தப்பட்டி மாரியம்மன் கோயிலைக் கடந்தபோது, அவர்களின் பின்னே இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்மநபர்கள் வந்திருக்கின்றனர்.

பணிக்குச் செல்லும் மணிமேகலை, ராமப்பிரியா
பணிக்குச் செல்லும் மணிமேகலை, ராமப்பிரியா
நா.ராஜமுருகன்

ஆசிரியைகளின் வாகனங்களுக்கு முன்வு பைக்கை திடீரென குறுக்காக நிறுத்திய இருவரும், கத்தியைக் காட்டி மிரட்டி, ராமப்பிரியா அணிந்திருந்த ஏழு பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டனர். மேலும், தலைமை ஆசிரியை மணிமேகலையிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையையும் தரும்படி மிரட்டியிருக்கிறார்கள். ஆனால், தலைமை ஆசிரியை தங்க நகையைக் கொடுக்க மறுத்ததால், அவர் முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு, மணிமேகலை அணிந்திருந்த ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டமுள்ள சாலையில் இரண்டு ஆசிரியைகளின் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதைக் கேள்விப்பட்ட அந்தப் பகுதி மக்கள், ஸ்பாட்டில் குவிந்தனர். இளைஞர்கள் சிலர், ஆசிரியைகளின் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் பிடிக்க பின்னே சென்றனர். ஆனால், அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலேயே கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை வருவதால், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தச் சாலையில் இரண்டு மர்ம நபர்களும் தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து, ஆசிரியைகள் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளியணை காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

சம்பவம் நடந்த இடத்தின் அருகிலுள்ள வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், ஆசிரியைகளிடம் கைவரிசை காட்டிய இரண்டு மர்ம நபர்களும் வாகனத்தில் போகும் காட்சி பதிவாகியிருந்தது. அதை போலீஸார் கைப்பற்றினர். இரண்டு ஆசிரியைகளும், 'அந்த இருவரும்தான் தங்கள் நகைகளைப் பறித்தவர்கள்' என்று சொல்ல, போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். பட்டப்பகலில், நட்டநடு சாலையில், ஆள்நடமாட்டம் இருக்கும் நேரத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர்களை வழிமறித்து, அவர்களின் தங்கச் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு ஓடிய சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு