Published:Updated:

சேலம்: ஹோட்டல் அதிபர் கடத்தல்; சிக்கிய ரௌடிகள்... பெண் தொழிலதிபரைத் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?

ரௌடிகள் கைது

ஹோட்டல் அதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரண்டு ரௌடிகளை கைதுசெய்த போலீஸார், பெண் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை தேடி வருகின்றனர்.

சேலம்: ஹோட்டல் அதிபர் கடத்தல்; சிக்கிய ரௌடிகள்... பெண் தொழிலதிபரைத் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?

ஹோட்டல் அதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் இரண்டு ரௌடிகளை கைதுசெய்த போலீஸார், பெண் ரியல் எஸ்டேட் தொழிலதிபரை தேடி வருகின்றனர்.

Published:Updated:
ரௌடிகள் கைது

சேலம், சூரமங்கலம் ரயில் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் சூரமங்கலத்தில் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இவர் மனைவி ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மேலும் சுப்பிரமணியம் ஹோட்டல் தொழிலோடு கார் விற்பனை, ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்துள்ளார். அப்போது சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்த சரண்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கிடையே கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது.

இந்நிலையில் சரண்யாவிடமிருந்து சுப்பிரமணியம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 24 லட்சம் ரூபாய் பணத்தை 100-க்கு 20 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் கடனாக வாங்கியுள்ளார். இதற்காக வட்டி மற்றும் அசல் தொகை என்று ரூ.96 லட்சத்தை திரும்பச் செலுத்தியுள்ளார். ஆனால் திடீரென்று சரண்யா 100-க்கு 30 ரூபாய் வட்டி வீதம் இன்னும் 70 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் எனக் கேட்டு வந்துள்ளார்.

அதற்கு, `அவ்வளவு பணம் தர முடியாது' என சுப்பிரமணியம் மறுத்ததால், நேற்று காலை சுமார் 11 மணியளவில் சுப்பிரமணியன் வீட்டிற்குச் சென்ற சரண்யா மற்றும் 3 பேர் அதிரடியாக சுப்பிரமணியனை அடித்து தாங்கள் வந்த காரில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் சுப்பிரமணியன் மனைவியிடம் `உன் கணவரை உயிரோடு விட வேண்டும் என்றால், நாங்கள் கேட்டப் பணத்தை கொடுக்க வேண்டும்' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

குமார்
குமார்

இதனால் பதறிப் போன சுப்பிரமணியத்தின் மனைவி அன்பரசி, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் உதவி ஆணையர் நாகராஜ் உடனே தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட நபர்களை தேட உத்தரவிட்டார். அப்போது முதற்கட்டமாக சுப்பிரமணியத்தை வீடு புகுந்து தூக்கிய நபர்கள் சேலம் சின்னம்மா பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரௌடியான டேவிட் என்கின்ற உதயகுமார் மற்றும் அவர் கூட்டாளி ஏற்காடு அடிவாரத்தைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.

அதன் மூலம் போலீஸார் சம்பந்தப்பட்ட இருவரையும் விரைந்து தேடியதில், நேற்று அதிகாலையில் கந்தம்பட்டி சுடுகாடு பகுதியில் ரௌடி டேவிட் மற்றும் அவர் கூட்டாளியான குமார் தலைமறைவாக இருந்தது கண்டறியப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். மேலும் சுப்பிரமணியம் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவரையும் மீட்டனர். இக்கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று கைதுசெய்யப்பட்ட ரௌடிகளிடம் போலீஸார் விசாரித்தபோது, ``ரியல் எஸ்டேட் அதிபரான சரண்யா கூறியதின் பேரில் சுப்பிரமணியத்தை கடத்தி 70 லட்சம் ரூபாய் கேட்டோம். அவரைத் தாக்கி மிரட்டினோம். ஆனால் அவர் பணத்தை தர வில்லை போலீஸுக்கு அவர் மனைவி சென்றதை அறிந்து அவரை விட்டுவிட்டு தப்பி விட்டோம்" என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடத்தலில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் அதிபர் சரண்யா சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்து, தனிப்படை போலீஸார் அவரைக் கைதுசெய்ய விரைந்துள்ளனர்.