Published:Updated:

மும்பை: நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தல்; ஹைதராபாத்தில் விற்க முயன்ற பெண்கள் கைது!

தாயிடம் குழந்தை ஒப்படைப்பு

மும்பையில் நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் திருடி விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மும்பை: நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தல்; ஹைதராபாத்தில் விற்க முயன்ற பெண்கள் கைது!

மும்பையில் நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் திருடி விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Published:Updated:
தாயிடம் குழந்தை ஒப்படைப்பு

மும்பையில் கடந்த வாரம் தன் மகளை ரூபாய் மூன்று லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை கைதுசெய்யப்பட்டார். திருமணமாகி 20 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாத மும்பை தம்பதி அந்தக் குழந்தையை விலைக்கு வாங்கினர். இந்த நிலையில், மும்பையில் மீண்டும் ஒரு குழந்தை திருடி விற்பனை செய்ய முயற்சி நடந்திருக்கிறது. மும்பை ஜுவில் நடைபாதையில் வசிப்பவர் முஸ்கானா. இவருக்கு ஒரு வயதில் மகள் இருக்கிறார். குழந்தையை முஸ்கானா, தன் தாயாரிடம் விட்டுவிட்டு இரவு பத்து மணிக்கு வெளியில் சென்றார். குழந்தை, அதன் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்தது. வெளியில் சென்றிருந்த முஸ்கானா இரவு ஒரு மணிக்கு வந்து பார்த்தபோது அவர் தாயாருடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை. உடனே அருகில் தேடிப்பார்த்தார்.

மும்பை: நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தல்; ஹைதராபாத்தில் விற்க முயன்ற பெண்கள் கைது!

ஆனால், எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து இது குறித்து முஸ்கானா, போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்து குழந்தையைத் தேட ஆரம்பித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு பெண்கள் குழந்தையை தூக்கிச்சென்றது தெரியவந்தது. அந்தப் பெண்கள் யார் என்பதை அடையாளம் கண்டுபிடித்து விலேபார்லே நேருநகரிலுள்ள அவர்களது வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, அவர்கள் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்களது மொபைல் நம்பரைக்கொண்டு அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். இதில் அவர்கள் சோலாப்பூர் நோக்கிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸாரின் துணையோடு அவர்கள் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டது.

கைது
கைது

கைதுசெய்யப்பட்ட ஷரீபா ஷேக், சுஜாதா ஆகியோரிடம் குழந்தையை ஏன் கடத்தினார்கள் என்று விசாரித்தபோது, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் குழந்தையை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. ஆனால், பேரம் படியாததால் அவர்கள் குழந்தையை சோலாப்பூருக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. மீட்கப்பட்ட குழந்தையை மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சல்கர் அதன் தாயாரிடம் ஒப்படைத்தார்.

487 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

மும்பையில் காணாமல்போன 487 குழந்தைகளை போலீஸார் கண்டுபிடித்து அதன் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். அதுவும் வெறும் 45 நாள்களில் செய்து முடித்திருக்கின்றனர். இது தொடர்பாக மும்பை போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், `காணாமல்போன மற்றும் கடத்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 487 குழந்தைகள் ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகள்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.