Published:Updated:

சென்னை: `ரூ. 1.5 கோடி மோசடி’ - மளிகைக் கடை ஊழியரின் மனைவி, உறவினர் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மளிகைக் கடை ஊழியரின் மனைவி பூர்ணிமா
மளிகைக் கடை ஊழியரின் மனைவி பூர்ணிமா

சென்னை பாரிமுனையிலுள்ள மளிகைக் கடையில் ஒன்றைக் கோடி ரூபாய் முறைகேடு செய்த ஊழியர், அதற்கு உடந்தையாக இருந்த மனைவி, அவரின் சகோதரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனையில் பாண்டி என்பவருக்குச் சொந்தமாக வைரவேல் ஸ்டார்ஸ் என்ற மளிகைக் கடை உள்ளது. இந்தக் கடையில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வேலை பார்த்துவந்தார். இவர்மீது உரிமையாளர் பாண்டி நம்பிக்கை வைத்திருந்ததால் கடையின் முழுப் பொறுப்பையும் வேல்முருகன் கவனித்துவந்தார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை வேல்முருகன் கடையின் கணக்கில் வரவு வைக்காமல், தன்னுடைய பெயரில் புதிதாக வங்கிக் கணக்கைத் தொடங்கி வரவுவைத்திருக்கிறார்.

வினோதா
வினோதா
பண மோசடி வழக்கு: ஒத்திவைக்கப்பட்ட ஜாமீன் மனு விசாரணை! - முன்னாள் அமைச்சர் தலைமறைவு?!

அதோடு, வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற பணத்தை தன்னுடைய மனைவி பூர்ணிமா வங்கிக் கணக்குக்கும், உறவினர் வினோதா வங்கிக் கணக்குக்கும் அனுப்பிவைத்திருக்கிறார். இந்த முறைகேடு குறித்து பாண்டிக்குத் தகவல் தெரிந்ததும், அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி மேற்பார்வையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கடந்த 20.2.2021-ம் தேதி வேல்முருகனைக் கைதுசெய்தனர். விசாரணையில் ஒன்றைரைக் கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பூர்ணிமா, அவரின் உறவினர் வினோதா ஆகியேரை போலீஸார் நேற்று தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கைதுசெய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு